பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 அறிவியல் தமிழ்


கண்ணனையே கண்டுரைத்த
கடிய காதல்
பாண் பெருமாள் அருள்செய்த
பாடல் பத்தும்
பழமறையின் பொருளென்று
பரவு மின்கள்!” 2

என்று பாராட்டியுள்ளார் வேதாந்த தேசிகர். பாண் பெருமாளின் வாக்கு நான்மறையின் செம்சொருளைச் செந்தமிழால் வெளியிடுகின்றது என்பர் திருவரங்கத்தமுதனார். பாண் பெருமாளின் திருவடிக் கமலத்தை வைணவத்திற்குப் புத்துயிரளித்த இராமாநுசரும் தம் முடியில் தரித்துக் கொண்டதாக 'இராமாநுச நூற்றந்தாதி' என்ற நூல் அறிவிக்கின்றது. திருப்பாணரின் வாக்காகிய 'அமலனாதி பிரானில்' கம்பனுக்கும் நிறைந்த ஈடுபாடு உண்டு என்பதை ஆய்வாளர்கள் நன்கு அறிவர். அமலனாதி பிரான்’ என்ற இச்சிறு பிரபந்தத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளையும், அழகிய மணவாளப் பெருமான் நாயனாரும் மணிப்ரவாள நடையில் வியாக்கியானங்கள் அருளிச் செய்துள்ளனர். வேதாந்த தேசிகரால் அருளிச் செய்யப்பட்ட 'முனிவாகந போகம்' என்ற பெயருடைய வியாக்கியானமும் இதற்கு உண்டு.

உலோக சாரங்க முனிவரால் சுமக்கப் பெற்று அரங்கநகர் அப்பனை அடைந்த திருப்பாணாழ்வார் அந்த அழகிய மணவாளனின் வடிவழகை அடி முதல் முடி வரை அநுபவிக்கின்றார். வறியவனுக்கு வளமான நிதி காட்டுவதுபோல் ஆழ்வாருக்கு இறைவன் தனது அழகைக் காட்ட, அந்த அழகில் திளைத்த ஆழ்வார் பத்துப் பாசுரங்களில் தமது அநுபவத்தை எளிய நடை


2. தேசிகப் பிரபந்தம்-132