பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 அறிவியல் தமிழ்

மலர்வது தாமரை, இந்தத் தாமரைக்குக் கதிரவன் திருப்பாணர் என்று குறிப்பிடுவர் பெரியவாச்சான் பிள்ளை. இத்தகைய இறைவனது அருளுக்கு அறிகுறியான மலரடி களைக் கண்ணுள்ளும் கருத்துள்ளும் காண்கின்றார் ஆழ்வார்.

அடுத்து, அப்பனின் பொன்னாடை புனைந்துள்ள திருமேனியழகு ஆழ்வாரின் உள்ளத்தைக் கவர்கின்றது.

அரை சிவந்த ஆடையின்

மேல்சென்றதாம் எனசிந்தனையே"

கீழ்ப்பாட்டில் திருக்கமலபாதம் வந்து என்றதும், இப் பாட்டில் ஆடையின் மேறசென்றதாம் என சிந்தனை' என்றதும் உற்று நோக்கி உணரத்தக்கவை. முதலில் எமபெருமான் தானாக ஆழ்வாரை அடிமை கொள்ள மேல் விழுந்தபடியும், பிறகு ஆழ்வார் சுவைகண்டு தாம் மேல் விழுகிறபடியும் இவற்றால தோற்றும். கன்றை சன்ற பசு தன் கன்றுக்கு முதலில் முலைக்காம்பின் சுவை தெரியாமை யால் தானே தன் முலைக்காம்பினை அதன் வாயில் கொடுக்கும்; பின்பு சுவடறிந்தால் பசு காற்கடைக் கொண்டாலும் கன்று தானே மேல் விழும். அங்ங்னமே, இருவடிகள் தாமே வந்து போக்கியமானவாறு கூறினார் முதற்பாசுரத்தில், இதில் தம்முடைய நெஞ்சு சுவடறிந்து மேல் விழுமாறு கூறுகின்றார் என்பதை உணர்க.

ஆடையின் அழகை அநுசந்தித்த ஆழ்வார் மூன்றாவது பாசுரத்தில் படைப்பிற்கெல்லாம் மூலகாரணமான உந்திக் கமலத்தைப் பாடி அநுபவிக்கின்றார்.

அந்தி போல் நிறத்(து) ஆடையும் அதன்மேல்

அயனைப் படைத்த(து) ஒரெழில்

4. அமலனாதி-2