பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 அறிவியல் தமிழ்

மத்தாகவும் வாசுகி என்னும் மாநாகத்தைக் கயிறாகவும்

கொண்டு திருப்பாற் கடலைக் கடையும் திட்டம் நிறை

வேற்றப்படுகின்றது. அமுதம் நிறைந்த பொற்கலசம் ஒன்று பாற்கடலின் அலைகளிடையே தோன்றி ஆடி அசைந்து

வருகின்றது. அந்தப் பொற்கலசத்தை யொப்பச் சந்திரன்

கருங்கடலில் உதயமாகின்றான்.

இக் காட்சியின் நுட்பத்தை எண்ணுந்தோறும் இன்பம் ஊற்றெடுக்கின்றது. கருங்கடலினிடையே தோன்றிய பொன்னிறச் சந்திரன் பாற்கடவினிடையே தோன்றிய அமுதம் நிறைந்த பொற்கலசமாக உவமிக்கப் பெற்றுள்ளது. மதியின் கதிர்களால் வெண்ணிறம் அடைதல் பற்றிக் கருங்கடலுக்குப் பாற்கடல் ஒப்பாகின்றது. சந்திரன் அமுதக் கதிர்களைக் கொண்டவனாதலால் அவனுக்கு அமுதக் கலசத்தை ஒப்புக் கூறுதல் மிகப் பொருத்தமாக அமைகின்றது. பாற்கடலைக் கடைந்த காலத்தில் கடைந்த அதிர்ச்சியால் வெளியில் தெறித்தெழுந்த பால் துளிகள் விண்ணில் நட்சத்திரங்களாகவும், வலி பொறுக்கமாட் டாமல் வாசுகியின் வாயினின்றும் உதிர்ந்த இரத்தி ைங்கள் கோள்களாகவும் காணப்பெறுகின்றன என்பது கவிஞனின் குறிப்பு. மேலும், சந்திரமண்டலம் வெண்ணிறத்ததாயினும் உதிக்கும் காலத்துச் செந்நிறமாகக் காணப்பெறுதலின் அது பொற்கலசமாக உருவகிக்கப் பெற்றது என்பது ஆழ்ந்து அறிய வேண்டிய குறிப்பு. கவிஞன் கூறும் முழுமதியக் காட்சியை மனத்திரையில் அமைத்து இன்பக் கடலில் மிதக்கின்றோம்.

வெண்மதியத் தோற்றம் இன்னொரு முறையாலும் வருணிக்கப் பெறுகின்றது. பாலனாகி ஏழுலகமும் உண்டு அந்த உண்ட களைப்புத் தீர ஆலிலையில் உறங்குவான் போல் யோகு செய்யும் பரந்தாமனின் உந்திக் கடலில் ஒரு