பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 அறிவியல் தமிழ்

ஒரங்களிலுள்ள பத்தியில் மாட்டு வண்டிகள் போன்ற மெதுவாகச் செல்லும் ஊர்திகள் அநுமதிக்கப்படுகின்றன. ஊர்க்காவலரின் ஆணையாலும் கண் காணிப்பாலும் இவை வழி விலகாது சென்று கொண்டுள்ளன. அங்ங்னமே புறமுக ஆற்றல் (Centrifugal force) என்ற ஒருவித இறைவனது ஆணையால் இக்கோள்களும் வழி விலகாமல் சுற்றிவந்து கொண்டுள்ளன. தம்மீதுள்ள பொருள்களும் வானத்தில் வீசியெறியப்பெறாமலும் உள்ளன. ஒவ்வொரு கோள்கட்கு இடையிலும் பல்லாயிரக்கணக்கான மைல் இடைவெளி கள் உள்ளன. இந்த இடைவெளிகளில்தான் சில சமயம் வால்மீன்களையும் (Comets) வீழ்மீன்கள் அல்லது எரிமீன் களையும் (Meteors) காண்கின்றோம்.

ஆற்றலின் மூலம்: பூமியும் ஏனைய கோள்களும் தத்தம் வாழ்வு நலன்களைச் சூரியனிடமிருந்தே பெறு கின்றன. சூரியன்தான் குடும்பத்தின் தலைவன். கோள் களும், சிறுகோள்களும், வால் மீன்களும் அவன் பெற்ற குழவிகள். நம் பூமியையும், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்தியூன் போன்ற கோள்களைச் சுற்றி வரும் சந்திரர்கள் இவனுடைய பேரப் பிள்ளைகள். இவை யாவும் சூரியனிடமிருந்துதான் தத்தமக்கு வேண்டிய வெப்பத்தை யும் ஒளியையும் பெறுகின்றன.

பூமியின் உயிர் நாடியாக இருப்பது சூரியனுடைய வெப்பமே. அதன் மேற்புற வெப்ப நிலை 12,000°F. உட்புற வெப்பநிலை 4,00,00,000°F. சூரியனிடம் உற்பத்தியாகும் வெப்பத்தின் அளவை இவ்வளவு என்று திட்டமாகக் கணக்கிட முடியாது. இரண்டேகால் மைல் குறுக்களவும் ஒன்பது கோடியே முப்பது இலட்சம் மைல் உயரமும் உள்ள பனிக்கட்டிக் கம்பத்தின் மீது கதிரவனின் வெபப முழுவதையும் செலுத்தினால் அஃது ஒரு வினாடி யில் நீராக உருகிவிடும் என்றும், அப்படி உருகின நீர் எட்டு