பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட மெய்ப்பொருள் 49

கம்பன் தான் காவியமாக அமைத்த இராமகாதையில் காணும் மெய்ப்பொருளை ஈண்டு ஆராய்வோம். கம்ப ராமாயணத்தை துணுகிக் கற்பவர்கள் காவியத்திற்கு ஏற்புடிைக் கடவுளாகிய திருமாலையே கம்பன் தனது வழிபடு கடவுளாகக் கொண்டவன் என்பதை நன்கு அறிவர். ஆகவே, அவனுள்ளத்திலே தேங்கிய வைணவ சமயக் கருத்துகள் ஆங்காங்கே வெளிப்படுவனவாயின. தமிழ்நாட்டில் தொன்றுதொட்டுக் கடவுள், உயிர், உடம்பு இவற்றைப் பற்றி வழங்கிய சீரிய கருத்துகளே ஆழ்வாரின் உள்ளங்களில் அமைந்து அவர்தம் பாசுரங்களில் வெளிப் பட்டன என்பதை நாம் அறிவோம். தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமைமிக்கு ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால்பட்ட கம்பநாடனின் காவியத்திலும் இக் கருத்துகள் வெளிப்படுவனவாயின. இசாமகாதையில் காண்டங்கள்தோறும் அவன் கூறும் காப்புச் செய்யுட் களாலும், காவிய மாந்தர்களின் கூற்றுகளைக் கொண்ட செய்யுட்களாலும், கவிஞனே சில சமயம் கூறும் தற்கூற்று களாலும் இம் மெய்ப் பொருள் கருத்துகள் வெளிப்படு வதைக் காணலாம்.

வைணவ சமயத்தின் தத்துவம் : வைணவ சமயத்தின் தத்துவம் மூன்று ஆகும். அவை சித்து, அசித்து, சசுவரன் (உயிர், உடம்பு கடவுள்) என்பன. சித்து என்பது, உயிர்களின் தொகுதி. அசித்து என்பது, மக்கள் விலங்கு முதலியவற்றின் உடம்பு முதலிய உலகப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் காரணமான பிரகிருதி என்பது.

3. “No man was ever a great poet without being at the same time a profound philiospher’—Essay on “WordsWorth’ by Coleridge. (Quoted by W.H. Hudson in his “An Introduction to the Study of Literature” p. 93).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/51&oldid=534070" இலிருந்து மீள்விக்கப்பட்டது