பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அறிவியல் தமிழ்

கூடாதொழியாதிறே'[1] என்ற தத்துவத்திரயக் கூற்றினையும் காண்க. இக்கருத்தினையே திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரும் அழகாகக் கவி அமைத்துக் காட்டுவர்.[2]

சரீர-சரீர பாவனை: சித்தும் அசித்தும் ஈசுவரனின் உடலாக அமைந்துள்ளன என்பது வைணவ சமயக் கொள்கை.[3] இஃது உடல் உயிர்த்தொடர்பு (சரீர-சரீரி பாவனை) என்று வழங்கப்பெறும். இக்கருத்து,

“வானின்று இழிந்து வரம்புஇகந்த
      மாபூ தத்தின் வைப்புளங்கும்
ஊனும் உயிரும் உணர்வும்போல்

      உள்ளும் புறனும் உளன்என்ப”[4]

என்ற பாடற் பகுதியில் அமைந்திருப்பதைக் காண்க. இங்கு ‘வான்’ என்பது மூலப்பிரகிருதி (அசித்து). மூலப் பகுதியிலிருந்து தோன்றிய ஐந்து பூதங்களின் விகாரமே இந்த அகிலம்.


“வானும் நிலனும் முதலீறில்

      வரம்பில் பூதம்”[5]

என்று பூதங்களின் வரம்பின்மையைப் பின்னும் விளக்குவன். இங்கு உணர்வு என்பது, தர்மபூத ஞானம். பிரகிருதியின் உள்ளே இருப்பதற்கு ஊனுக்குள் உயிர் இருப்பது உவமை; அங்ஙனமே அவன் அதன் வெளியில் இருப்பதற்கு உயிரில்

———————

  1. தத்துவத்திரயம். ஈசுவரபிரகரணம்-சூ29
  2. திருவரங்கத்துமாலை-18
  3. தத்துவத்ரயம்-சித்பிரகரணம்.சூ.41
  4. அயோத். காப்பு
  5. அயோத், நகர் நீங்கு-120