பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கம்பன் கண்ட மெய்ப்பொருள் 53

உணர்வு இருப்பது உவமை. மேற்கூறிய பாடலில் ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறனும் உளன் என்ப" என்னுமிடத்து,

'திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவை மிசைப்

படர்பொருள் முழுவது மாய் அவை அவைதொறும் உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்'

என்ற ஆழ்வார் பாசுரத்தின் கருத்தினை அடக்கிக் கொண்டிருப்பது கண்டு மகிழத் தக்கது. உயிர் உடம்பி னுள் இருந்து அதனைத் தரிக்கச் செய்து அதற்குத் தலைவனாக நின்று அதனை நடத்துவது போலவே: இறைவனும் எல்லாப் பொருள்களுள்ளும் இ ரு ந் து அவற்றைத் தரிக்கச் செய்து அவற்றிற்குத் தலைவனாக நின்று அவற்றைத் தன் விருப்பம்போல் நடத்துகின்றனன் என்பது கருத்து.

அசித்து விகாரத்திற்கு இடமானது. ஐந்து பூதம் களின் விதாரமின்றி அகிலம் என்ற ஒன்று இல்லை.

‘'நீலம் தீ நீர்வளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்கம் உலகம்' என்பச் தொல்காப்பியனாரும். க ம் ப. நா ட ன் இக் கருத்தையே,

"அலங்கலில் தோன்றும் பொய்ம்மை

அர்வெணப் பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின்

வேறுபா டுற்ற வீக்கம்' (அலங்கல்-மாலை)

48. திருவாய். 1.1:7 49. தொல். பொருள். மரபு-89 50. சுந்தர. காப்பு.