பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவியல் தமிழ்

89

வாயிலாகவே பயிலும் வாய்ப்பே நிலவி வந்தது. இவற்றைத் தாய்மொழிமூலம் கற்கும் சூழ்நிலையும் கற்பிக்கும் வாய்ப்பும் வசதியும் ஏற்படாமலே போய் விட்டது. இதனால் தமிழில் அறிவியல் துறை நூல்கள் தோன்றும் நிலையே எழவில்லை.

தொடக்கநிலைத் தொண்டர்கள் : ஆயினும், நாட்டு விடுதலை இயக்கம் முற்றிய நிலையிலிருந்தபொழுது காந்தியடிகள் போன்ற சில பெரியோர்களின் தூய்மையான உள்ளத்தில் தம் நாட்டுக் கல்விநிலைபற்றிய சிற்தனையும் எழுந்தது. தாய்மொழி மூலம் கல்வி புகட்டப் பெற்றால் நாட்டு மக்களின் அறிவு நிலை விரைவாக வளரும் என்ற எண்ணம் அவர்களிடையே வேரூன்றலாயிற்று; நாடு விடுதலை அடைந்த பல்லாண்டுகட்கு முன்பிருந்தே (1930க்கு மேல்) தாய்மொழிக் கல்வித் திட்டத்தையும் வகுக்கலாயினர். முதன் முதலில் உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளி இறுதித் தேர்வுக்கான ஏ. பிரிவு பாடங்களைத் (வரலாறு, புவிவியல், பொது அறிவியல் போன்றவை) தாய்மொழியில் கற்பிப்பதும் தேர்வுகள் எழுதுவிப்பதுமான முறைகள் செயற்பட்டன. நாளடைவில் சி. பிரிவு பாடங்கட்கும் (வேதியியல், இயற்பியல், கணிதம் முதலிய விருப்பப் பாடங்கள்) இம் முறைகள் நீட்டிக்கப்பெற்றன. இக் காலத்தில் பல்வேறு துறைகளில் தாய்மொழியில் பாட நூல்கள் தோன்றலாயின. தொடக்கத்தில் தோன்றிய நூல்களில் கலைச் சொற்கள் சரியாக இல்லாத காரணத்தாலும், நூலெழுதுவோரின் தமிழறிவு குறைவாக இருந்ததாலும் நடை ஆற்றொழுக்குபோல அமையவில்லை; படிப்பதற்கு அது சரளமாகவும் இல்லை. நாளடைவில் (1940க்கு மேல்) மொழி அறிவும், துறையறிவும் சேர்ந்த ஆசிரியர்களின் தொகை பெருகவே, நூல்களும் புது மெருகுடன் புத்தொளி விசித் திகழலாயின. இக் காலத்தில் உயர்நிலைப் பள்ளிக்

அ.த-6