கோவை. இளஞ்சேரன்
99
துன்பம்,
அது 'இடும்பை இயல்பென்று கொண்டு உள்ளத்தின் ஊக்கத்தால்
துடைக்கப்படுவது;
துடைக்கப்பட்டதைக் கலக்கமில்லாத உறுதித்துரணில் வைப்பது’-என மூன்று கருத்துக்கள் உள்ளன. இவை "உளவிய அறிவிய"லில் பொருந்துகின்றன.
வள்ளுவர் : வல்லுநர் :
துன்பம் : துன்ப
(மன ஊக்கத்தால்) துடைத்து : ஊக்க
ஊன்றும் தூண் : அமைதி
18ஆம் நூற்றாண்டளவில் ஆய்ந்து காணப்பட்ட இன்ப துன்ப விரிவுகள் திருவள்ளுவத்தில் முறையே ஒவ்வொரு குறளில் அமைந்தவையாகின்றன. திருவள்ளுவம் ஒர் உளவியல் அறிவியலில்தன் பங்களிப்பை வைத்துள்ளமைக்கு இஃதொரு சான்று. இன்பம் சீர்குலையாமல் அமைய வேண்டும். அதற்கு இடையூறு வராமல் பாதுகாப்பு வேண்டும். அப்பாது காப்பாம் 'ஏமம்' இன்றியமையாதது.
உ. ஏமம்
ஏமம் என்றால் பாதுகாப்பு. இடையூறோ, துன்பமோ, அழிவோ நேராமல் பாதுகாப்பளிப்பதும் ஏமம். இவை வரும்போது காத்துக்கொள்வதும் ஏமம். ஏமம், ஏமாப்பு, ஏமார்த்தல் எனும் மூன்றும் ஒரே பொருளன.