பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவை. இளஞ்சேரன்

101

(1)செல்வ ஏமம்

"செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து"

(112)

இதில் ஆக்கம் செல்வத்தைக் குறிக்கும். இச்செல்வம் நேர்மை உடையவனால் ஆக்கப்பட்டால் அது அவனுக்குப் பின் வாழும் மக்களுக்கும் தொடரும்; நலன்களுக்கும் ஏமம் ஆகும். இதனால் செல்வம் ஓர் ஏமப் பொருளாகிறது.

இன்றளவில் அமெரிக்க நாடு பெரும் வல்லரசு நாடு. குறிப்பிடத்தக்க மேன்மையுடைய வல்லரசு. வல்லரசுடன் வளன் அரசு. இவ்வளத்திற்கு அந்நாட்டில் செல்வம் கொழிப்பதே காரணம். பெரும் செல்வ வளம் கொண்டு அறிவியல் ஆய்வுகளால் மக்களுக்கு ஆக்கம் தருகிறது. போர்க்கருவிகளைச் செல்வத்தால் குவித்து எத்தாக்கு தலையும் அழிக்கும் பாதுகாப்பைத் தந்துள்ளது. ஈரானும் அது போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளும் தம் செல்வ வளத்தால் அந்நாட்டு மக்களைப் பாதுகாக்கின்றன.

இந்நாடுகளின் செல்வவளம் இந்நாட்டு மக்களின் தலைமுறை தலைமுறைக்குப் பாதுகாப்பாக விளங்குகிறது, எதிர்கால வளங்கள் பலவற்றிற்கும் செல்வக் குவியல் பாதுகாப்பாக உள்ளது. இதுதான் திருவள்ளுவரால் 'எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து' எனப்பட்டது.

அவ்வந் நாட்டுச் செவ்வங்களின் நிலைக்கு ஒரு விதிப்பு வைத்தால், அச்செல்வம் செப்பம் உடைய வழியில் வர வேண்டும். செப்பம் தவறி வந்த செல்வம் செப்பம் தவறி யோர்களாலே பாதுகாப்பற்று அழிக்கப்படும். போரால் மட்டும் அன்று; அவ்வந்நாட்டு மக்களின் செப்பமில்லாத செயல்களாலும் பாதுகாப்பற்றதாகும். இதற்கு ஒர் உவமை கூறித் திருவள்ளுவர்