பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

101


அ - இல்லை + துவைதம் இரண்டற்றது என்று பொருள் படுகின்றது.

இராமாதுசரின் கருத்துப்படி உலகம் (அசித்து) உயிர் (சித்து). இறைவன் (ஈசுவரன் )/யாவும் உண்மை : உலகமும் உயிரும் பிரம்மத்திற்கு உடல். அது சரீர - சரீரி பாவனை (உடல் உயிர் உறவு) என்று வழங்கப்பெறும். பிரம்மத்தின் பகுதிகளே என்பதும், ஆன்மாவையும் உடலையும் இயக்கும் உயிரே இறைவன் என்பதும் இவருடைய 'உடல்மிசை உயிரெனக் சுரந்தெங்கும் பரந்துனன்' (திருவாய்1.1:7) என்று விளக்குவர், நம்மாழ்வார்.

"தனிமாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாய்த் தான்தோன்ற
முனிமாப் பிரம்ம முதல்வித்தாப்
உலகம் மூன்றும் முளைப்பித்த

தனிமாத் தெய்வம்" -
திருவாய் 8.10.7

என்று மேலும் விளக்குவர்.

இறைவனின் திருமேனிகள் : இறைவனுடைய திருமேனி பரத்துவம், வியூகம், விபவம். அத்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐந்து வகையோடு கூடியிருக்கும்.

பரத்துவம் : பெரிய பிராட்டியார், பூமிப்பிராட்டியார், நீளாதேவி இவர்களும் நித்திய முக்தர்களும் சூழ வைகுத்தத்தில் இருக்கும் இருப்பு, வியூகம் : பல்வேறு வகையில் இவ்வுலகைப் படைத்தல் முதலிய தொழில்களை நடத்துவதற்கும் பிறவற்றிற்கும் வியூகவாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருந்தரன் என்ற பெயர்களுடன் நான்கு நிலைகளில் இருக்கும் இருப்பு. விபவம்: இராமகிருஷ்ணாதி அவதாரங்கள் உட்பட எண்ணற்ற அவதாரங்கள் அடங்கியது. அந்தர்யாமித்துவம் : சேதநர்களின் உள்ளே புக்கிருந்து எல்லாச் செயல்களுக்கும் ஏவுபவனாய் இருக்கும் இருப்பு. அர்ச்சை : அன்பர்கள் எதைத் தமக்குத் திருமேனியாய்க் கொள்கின்றனரோ அதனையே தம் வடிவமாய்க் கொண்டுள்ள நிலை.

ஆன்மாக்கள் நித்தியமானவை, எண்ணற்றவை. சீவான் மாக்கள் பத்தர் - தளைப்பட்டிருப்பவர், முத்தர் - முன்னர்க் கட்டுண்டு, பின்னர் விடுபட்டு முக்தி நிலையை அடைந்தவர், நித்தியர் - என்றுமே கட்டுண்டு இருந்திராத முத்தி நிலையில் உள்ளவர் என மூவகைப்படும். ஆன்மாவின் முக்கிய குணம்