பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொன்மொழிகள்

காலம் பறந்து செல்வது. நம் இளமையில் இறைவனை நாம் நினைவில் கொள்ளாவிடில், முதுமையில் அவனைப் பற்றி எண்ண ஆற்றல் நமக்கு இல்லாது போகும்.

—ஹான்ஸ் கிரிஸ்ட்டியன் ஆண்டர்லைன்

காலமெனும் முட்டாள, ஒசைப்படாமல் விரைந்து கடக்கின்றான்; காளைப் பருவம் பற்றி நான் கனவு கானும் முன்பே, முதுமை நெருங்குகிறது.

—வில்லியம் கிஃப்போர்ட்

கெட்டுப் போய் விட்டது காலமல்ல, மனிதன் தான்.

—ஜே. ப்யூமாண்ட்

நாம் வாழும் காலத்தைப் பழிப்பது, அதிகாரத்தில் உள்ளவர்களைக் குறை கூறுவது, கடந்த காலத்தை எண்ணிக் கண்ணிர் சிந்துவது, எதிர் காலத்தைப் பற்றி ஆதாரமற்ற கனவுகள் காண்பது, இது மனித சமுதாயத்தில் பெரும் பகுதியினருக்கு இயல்பு.

—எட்மண்ட் பர்க்