பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

புதுப் பரிகாரங்களை மேற்கொள்ள மாட்டாதவன், புதுக் கேடுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். புதுமைகளைப் புகுத்தும் தலையாய சக்தி, காலம்.

—ஃபிரான்ஸிஸ் பேக்கன்

நிகழ் காலத்தை நாம் கவனிப்போம். வருங்காலத்தைப் பொறுத்தவரை தருணம் வங்து வாய்க்கும்போது அதைச் சமாளிக்கும் வகையை நாம் அறிந்து கொள்வோம்.

—பியேர் கோர்னேய்ல்

சீராக ஒழுங்கு செய்யப்படும் நேரம், சீராக ஒழுங்கு செய்யப்பட்ட உள்ளத்திற்கு, உறுதியான அறிகுறி.

—ஸர் ஐஸ்க் பிட்மன்

நாம் உறங்குகிறோம். ஆனால், வாழ்வெனும் தறி ஒருபோதும் நிற்பதில்லை. கதிரவன் மறைந்த நேரம், நெசவிலிருந்த வடிவமைப்பு, காலையில் கதிரவன் உதிக்கும் நேரத்திலும், நெசவிலிருக்கும்.

—ஹென்ரி வார்ட் பீச்சர்

நான் நேரத்தை விரயமாக்கினேன். இப்பொழுது நேரம் என்னை விரயமாக்குகிறது;

—வில்லியம் ஷேக்ஸ்பியர்