பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கருத்துக்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கவே, காலம், எல்லாம் வல்ல இறைவனால் உருவாக்கப்பட்டது.

—நிக்கலஸ் மர்ரே பட்லர்

காலம், தலைசிறந்த ஆசான்.

—எட்மண்ட் பர்க்

காலம் பறக்கின்றது; நம்மையும் தன்னுடன் ஈர்த்துச் செல்கிறது. நான் பேசிக் கொண்டிருக்கும் நொடிப் பொழுது, ஏற்கனவே என்னை விட்டுத் தொலைவில் சென்று விட்டது.

—நிக்கோலா புவாலோ

காலமெனும் குடை இராட்டினம். இவ்வாறு தன் வஞ்சங்களை வெளிக் கொணர்கிறது.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

கூழாங்கற்கள் பாவிய கரையை நோக்கி
கடல் அலைகள் கடுகிச் செல்வதுபோல்,
கல்வாழ்வின் நிமிடங்கள் தங்கள் முடிவு நோக்கி,
விரைந்து செல்கின்றன.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்