பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 அறிவியல் பயிற்றும் முறை (3) ஆசிரியர் செய்வதை அல்லது கரும்பலகையில் எழுதுவதை மாளுக்கர்கள் எளிதில் பார்க்கவும், மாளுக்கர்கள் செய்வதை ஆசிரியர் எளிதில் பார்க்கவும் வசதியாக இருத்தல் வேண்டும். (4) தரை இடத்தை இருக்கை வசதிகள், பிற வசதிகளுக் கேற்றவாறு பிரித்துக்கொள்ளுதல் வேண்டும். கிட்டத்தட்ட பெஞ்சு இடத்தில் 10 சத விகிதம் தனிப்பட்ட துணைக்கருவிகளே அமைத் தலுக்குப் பயன்படுத்தலாம். - - (5) மின்னுற்றல், எரிவாயு, தண்ணீர் முதலிய வசதிகள் நன் முறையில் அமையும்படி பார்த்துக்கொள்ளல் வேண்டும் : மின் இனப்புகள், எரிவாயு ஆகியவை தண்ணிர்க் குழாய்களுடன் சேராத வாறு அமைத்தல் வேண்டும். (6) தனிப்பட்ட அறைகள் இருப்பினும் சேகர அறைக்கும் ஏற்பாடு இருக்கவேண்டும். இனி, ஆய்வகம், அத்துடன் தொடர்புள்ள பிற அறைகள் ஆகியவைபற்றி ஒரு சில செய்திகளே அறிவோம். ஆய்வகம் : இந்த அறையில் மாணுக்கர் சோதனைகள் செய்வதற் கேற்ற வசதிகள் ஒரு புறத்திலும், வகுப்பறைக்கு வேண்டிய சாதனங் கள் ஒரு புறத்திலுமாக அமைந்திருக்கும். ஆசிரியர் சோதனைகள் செய்துகாட்டுவதற்கேற்ற மேசையும் இருக்கும். இரண்டு பக்கத் திலும் சுவரில் கரும்பலகை அமைக்கப்பெற்றிருக்கும். தேவைப்படுங் கால் சாளரங்களே அடைத்து இருட்டறையாக ஆக்கிக்கொள்ளவும் அச் சமயத்தில் நல்ல காற்ருேட்டம் இருக்கவும் தக்க ஏற்பாடுகள் செய்ய்ப் பெற்றிருக்கும். பிம்பம் வீழ்த்து துணைக்கருவியைக் கொண்டு அடிக்கடி படக்காட்சிகள், கிழற்படங்கள் முதலியவற்றைக் காட்டுவத ந் கேற்ற வசதிகளும் இந்த அறையில் அமைக்கப்பெற்றிருக்கும். 45'x25 அளவுள்ள இரண்டு அறைகள் ஒரு பள்ளிக்கு மிகவும் இன்றியமையாதவை. ஒன்றில் மானுக்கர்கள் பெளதிக இயல், உயிரி பல் பகுதிகளுக்கேற்ற சோதனைகளைச் செய்யவும், மற்ருென்றில் வேதி யியல்-பெளதிக இயல் பகுதிகளுக்கேற்ற சோதனைகளைச் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பெற்றிருக்கும். ஒவ்வொன்றிலும் 20 பேர்கள் ஒரே காலத்தில் சோதனைகள் செய்யலாம். ஒரு வகுப்பில் பாதிபேர் பெளதிக இயல் - வேதியியல் பகுதிகளில் சோதனைகளேச் செய்யும் பொழுது எஞ்சிய பாதிப் பேர் உயிரியல் பகுதியற்றிய சோதனைகள் இப் பகுதிகள் ஒரே ஆசிரியரால் கற்பிக்கப் பெற்ருலும் சரி, தனித்தனி இரண்டு ஆசிரியர்களால் கற்பிக்கப்பெற்ருலும் சரி, அதற்கேற்ற வாறு பாடவேளைப் பட்டியை அமைத்துக்கொள்ளலாம். இந்த அறையின் அமைப்புபற்றிய முழுவிவரங்கள் பின்னர்க் கூறப்பெறும். ஆயத்த அறை பயிற்றும் அறை அல்லது சோதனைச்சாலைகளில் அவ்வப்பொழுது பயன்படக்கூடிய துணைக்கருவிகளையும் பிறவற்றை