பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அறிவியல் பயிற்றும் முறை AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS சில்லறைச் சாமான் அறை : இந்த அறையில் பல்வேறு சாமான் களே வைத்துக்கொள்ளலாம். 9 x 7 அளவில் இந்த அறை இருந்தால் போதுமானது. - அறிவியல் ஆசிரியர்கள் அறை , ஆசிரியர்கள் ஒய்வு நேரத்தில் தங்கவும், மாணுக்கர்களின் எழுத்து வேலைகளேத் திருத்தவும் இந்த அறை மிகவும் இன்றியமையாதது. பள்ளியில் அறிவியல் பாடம் கற்பிப்பவர்கள் அனைவரும் இந்த அறையில் தங்கலாம். இதில் இருக்கை வசதிகள், அலமாரி வசதிகள் முதலியவை இருத்தல் வேண்டும். 15 x 9 அளவில் இந்த அறை அமைந்தால் போதும். பொருள் வசதியிருந்தால் அதற்கு மேலும் விசாலமாக இருக்குமாறு அமைத்துக்கொள்ளலாம். - பொது அறிவியலுக்கேற்ற ஆய்வகம் : பள்ளிகளில் நிதி வசதியிருந் தால் பெளதிகீம், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்றிற்கும் தனித்தனி ஆய்வகங்களே அமைத்துக்கொள்ளலாம். பொது அறிவியல் பாடத்தில் அவ்வப் பகுதிகள் கற்பிக்கப்பெறுங்கால் இந்த ஆய்வகங்களேப் பயன் படுத்திக்கொள்ளுதல் வேண்டும். நிதி வசதியில்லாத பள்ளிகளில் பொது அறிவியலுக்கேற்ற ஆய்வகங்களே மட்டிலும் அமைத்துக் கொண்டால் போதுமானது. இன்று உயர்நிலப்பள்ளிகளில் பொது அறிவியல் கற்பிக்கப்பெறுகின்றது. எனவே, அப்பாடத்திற்கேற்ற ஆய்வக அமைப்பைமட்டிலும் ஈண்டுக் கவனிப்போம். ஏனேய வேதி யியல், பெளதிக இயல், உயிரியல் பாடங்களுக்கேற்ற ஆய்வகங்களின் அமைப்பைக் குறித்து அறிவியல் முறை நூல்களில் கண்டு கொள்க. புதிய பள்ளிகளாக இருப்பின் ஆய்வகத்தை அமைப்பதற்கு முன்னர் கன்கு சிந்திக்கலாம் ; நடைமுறையிலுள்ள பள்ளிகளில் வேறு ஆய்வகங்களிருப்பின் அவற்றை உயிரியல் பாடங்களே மட்டிலும் கற்பித்தற் கேற்றவாறு சிறிது மாற்றியமைத்துக்கொள்ளலாம். இன்று பெரும்பாலான பள்ளிகளில் பொது அறிவியலுக்கேற்ற ஆய்வகம் இல்லே. எனவே, அந்த ஆய்வக அமைப்பைப்பற்றி நல்ல அதுபவம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. எல்லாச் செயல்களுக்கும் அல்லது இரண்டு செயல்களுக்கு மட்டும் பயன்படும் ஆய்வக அமைப் பைப்பற்றி ஒரு சில கருத்துகளை ஈண்டுத் தருவோம். -- எல்லா கோக்கங்களுக்கும் பயன்படும் ஆய்வகம் : நடைமுறையில் இத்தகைய ஆய்வகத்தை அமைப்பது சிரமம். என்ருலும், அதை அமைக்க நேரிடும்பொழுது அடியிற்கண்ட கூறுகளில் கவனம் செலுத் 1. பல ஆண்டுகட்குமுன்னர் இருந்தது போல் மீண்டும் அறிவியல் பாடம் விருப்பப்பசடமாக அமைந்துவிட்டது. - 2. The Teaching of General Science in Secondary Schools (John Murray): Chap. 3,