பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அறிவியல் பயிற்றும் முை SAASAASAASAASAASAASAASAASAAMMS (1) சோதனைச்சாலையிலுள்ள பொருள்களைச் சோதனைச்சாலைக் வெளியே எடுத்துச் செல்லல் ஆகாது. (2) சோதனைச்சாலைக்குரிய துணைக்கருவிகளேயும் பிற பொருள் களேயும் சோத&னச்சாலேயில் மட்டிலுந்தான் பயன்படுத்துதல் வேண்டும். - (3) துணைக்கருவிகளேயும் பிற பொருள்களேயும் ஆசிரியராக சொல்லப்படும் செயல்களுக்கு மட்டிலுமே பயன்படுத்துதல் வேண்டும் சோதனைகளிலும் ஆசிரியர் சொல்லும் குறிப்புகளே அப்படியே பின் பற்றுதல் வேண்டும் : சிறிதும் விலகுதல் ஆகாது. - (4) எந்தச் சிறு விபத்துகள் நேரிட்டாலும் அவை உடனே ஆசிரியர் கவனத்திற்குக் கொண்டுவரப்பெறுதல் வேண்டும். (5) துனேக்கருவிகளிலுள்ள குறைகளேயும் உடைசல்களேயும் உடனே ஆசிரியருக்குத் தெரிவித்தல் வேண்டும். -. r (6) பெயரொட்டிகள் (Labels) தெளிவாக இராவிட்டாலும் சரியாகப் பொருந்தாதிருந்தாலும் அதையும் ஆசிரியரிடம் உடனே தெரிவித்தல் வேண்டும். - - . (7) பொருளும் அதன் பெயரைக் குறிப்பிடும் பெயரொட்டியும் ஒன்றுதான என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொண்டுதான் சோதனையில் இறங்குதல்வேண்டும். - - (8) போத்தல்களின் கழுத்தைப்பிடித்துத் தூக்குதலைத் தவிர்த் தல் வேண்டும். - - (9) போத்தல் மூடிகளைச் சரியான முறையில் திறந்து சரியான முறையில் உடனே மூடுதல்வேண்டும். ஒரு போத்தலின் மூடியைப் பிறிதொரு போத்தலில் போடவே கூடாது. (10) எந்தச் சோதனையிலும் மிகக் குறைந்த அளவு வேதியியற் பொருளேயோ பிற பொருளையோ பயன்படுத்துதல் வேண்டும். (11) தவறுதலாக வாயில் போட்ட பொருளே உடனே துப்பி வாயை ரோல் நன்ருகக் கழுவுதல் வேண்டும். - (12) ஆசிரியர் குறிப்பின்றி எந்தப் பொருளையும் சுவைத்துப் பார்த்தல் ஆகாது , மணம் பார்க்க நேரிடும்பொழுதும் மிகப் பாது காப்பாக இருத்தல் வேண்டும். (13) அமிலம் அல்லது காரம் ஆடையில் பட்டால் அதை உடனே அதிகமான நீரால் கழுவிவிடவேண்டும். - (14) பயன்படுத்தியவுடன் துணைக்கருவிகளையும் பிறவற்றையும் தூய்மையாக்குவதுடன் சோதனை செய்த மேசையையும் துப்புரவாக்கி விடுதல் வேண்டும். - - (15) திடப்பொருள்களைக் கழிநீர்த் தொட்டிகளில் போடுதல் ஆகிTது. • * - -