பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#23 அறிவியல் பயிற்றும் முறை வேண்டும். கழுவிய பிறகு ஒரு சொட்டு விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை விட்டுப் பஞ்சை வைத்து நன்ருகக் கட்டுதல் வேண்டும். வெட்டுக் காயங்களும் கீறல்களும் : இவற்றைச் சிகிச்சை செய்வதில் மூன்று படிகள் உள. அவை. (அ) இரத்தப் போக்கை நிறுத்துதல் : (ஆ) காயங்களே அன்டிசெப்டிக் மருந்து கலந்த திரவத்தால் கழுவுதல் ; (இ) தொற்று நேரிடாது பாதுகாத்தல். பாய்குழலிலிருந்தோ வடி குழலிலிருந்தோ அபாயகரமான குருதிப் போக்கு நேரிட்டால், முதலில் குருதிப்போக்கை நிறுத்துவதற்கு வழிகோலுதல் வேண்டும். சிறிதளவு குருதி வடியும் காயங்களாக இருப்பின் அவற்றைத் தூய்மையான குளிர்ந்த நீரினல் கழுவி அழுக்கை நீக்குதல் வேண்டும். கண்ணுடித் துண்டுகள் குத்திக்கொண்டிருந்தால் அவற்றைச் சாமனத்தால் அகற்றுதல்வேண்டும். அகற்ற இயலாவிடின் மருத்துவர் உதவியை நாடுதல் நன்று. குருதி வடிவது கிற்காவிட்டால் காயத்தை அன்டிசெப்டிக் கலந்த திரவத்தால் கழுவி காயத்தை இறுகக் கட்டி இரத்தம் வடிதலே நிறுத்தலாம். காயங்கள் தூய்மையாக இருந்தால், அவற்றின்மீது பஞ்சைப் பரப்பி டிங்ச்சர் அயோடினேப் பூசலாம். வேண்டுமானுல் அதற்குமேல் கட்டும் போடலாம். அழுக்குப் படிங் திருத்தாலன்றி காயங்களைக் கழுவுதல் கூடாது , அமிலம் பட்டிருந் தால்தான் கழுவுதல் வேண்டும். அழுக்குப் படிந்த காயங்களைச் சோப்பு கரைந்த ரோல் கழுவலாம். மிகுதியாகக் குருதி வடியும் காயங்களாக இருந்தால் குருதியை அமுக்கத்தால் நிறுத்துவது இயலாது. வடிகுழலிலிருந்து குருதி வந்தால் காயத்திற்குக் கீழே சிறிது தூரத்தில் அமுக்கம் கொடுத்து குருதி வடிதலே நிறுத்தலாம். விரல்களைக் கொண்டே தேவையான அளவு அமுக்கத்தைக் கொடுத்துவிடலாம். குருதி வடிதல் நின்றவுடன் காயத்தை அன்டிசெப்டிக் கரைசலால் கழுவி மூடுதல்வேண்டும். பாய் குழலிலிருந்து வடியும் குருதியைக் காயத்திற்கு மேற்புறமாகவுள்ள பிரத்தியேகமான இடங்களில் அமுக்கத்தைக் கொடுத்து நிறுத்தலாம். அந்த இடங்களில் அமுக்கம் கொடுக்கும்பொழுது பாய் குழாய் எலும்புடன் நன்கு அமுங்கிக் குருதி பாய்வது தடைப்படும். சாதாரண மாக, சோதனைச்சாலைகளில் கண்ணுடிக் குழல்களே வெட்டுவதால் உள்ளங்கையில் காயம் உண்டாகிக் குருதிப் பெருக்கு ஏற்படுகின்றது. இக்கிலேயில் மணிக்கட்டில் இரண்டு இடங்களில் அமுக்கினல் குருதி ஒழுக்கு கிற்கும். பாய் குழாய்க் குருதிப் பெருக்கை நிறுத்தும் முறைகள்