பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. ஆய்வகம்-பாதுகாப்பும் முத லுதவியும் 12 அனேத்தையும் ஈண்டுக் கூறுவதென்பது இயலாத தொன்று. ஒவ்வோர் அறிவியல் ஆசிரியரும் முதலுதவி அளிப்பதில் நன்கு பயிற்சி பெற்றவர் மூலம் அவற்றைச் செயல் முறைகளில்ை அறிந்து கொள்ளவேண்டும். காயத்தினுள் கண்ணுடித் துண்டுகள் இருக்கும் பொழுது அமுக்கம் தருவது கூடாது. கண்ணுடித்துண்டுகளே நீக்க முடியாத நிலையில் காயத்திற்கு மேற்புறத்திலோ கீழப்புறத்திலோ அமுக்கத்தைத் தருதல் வேண்டும். குருதி வடியும் காயங்களின்மீது போடும் மெத்தை போன்ற பஞ்சை அகற்றுதல் கூடாது ; பஞ்சு முழுவதும் குருதியால் நனந்து விட்டால் அதன்மீது வேறு ஒரு பெரிய மெத்தை போன்ற பஞ்சைப் போட்டு மூடவேண்டுமேயன்றி, நனேந்த பஞ்சை அகற்றுதல் கூடாது. அமுக்கத்தைக் கொடுத்துக்கொண்டே இருத்தல்வேண்டும். நச்சு வாயுகளால் நேரிடும் விபத்துகள் : சாதாரணமாகப் பள்ளி ஆய்வகங்களில் கச்சு வாயுகளால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவ தில்லை. என்ருே ஒரு நாள் நேரிடலாம். எனினும், அறிவியல் ஆசிரியர்கள் அச்சமயங்களில் என்ன முதலுதவி அளிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததன்ருே ? கார்பன் மோனக்ஸைடைச் சுவாசித்தலால் விபத்துகள் நேரிடக் கூடும். ஆனால், நல்ல முறையில் இயங்கிவரும் ஆய்வகத்தில் இவை நேரிடா, சில வாயுக்களைச் சுவாசித்தலால் அயர்வு உணர்ச்சியோ த&லவலியோ நேரிடும் : அன்றி வாய், தொண்டையிலுள்ள் சளிச்சவ்வு பாதிக்கவும் படலாம். எப்படியிருந்தாலும் நோயாளியை உடனே காற்ருேட்டமுள்ள இடத்திற்குக் கொண்டுசெல்லுதல்வேண்டும். அவர் அணிந்துள்ள ஆடைகளைத் தளர்த்திவிட்டு கா.பி அல்லது வேறு சூடான பானத்தைக் கொடுக்க வேண்டும். சுய அறிவை இழந்து இருந்தால் மூர்ச்சை தெளிவிக்கும் முறைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். தேவையானல், செயற்கைச் சுவாச முறைகளே மேற் கொள்ளலாம். - சளிச்சவ்வுகளில் ஏற்பட்டுள்ள அழற்சியைப் போக்குவதற்குப் பல முறைகள் கூறப்பெற்றுள்ளன. உறைந்த பாலேப் பயன் படுத்தலாம் ; எல்லாவற்றிலும் மேலானது கிளிசரினே உறிஞ்சுத லாகும். குளோரின் புரோமின் புகைகளைச் சமாளிப்பதற்கு நோயா? அம்மோனியாவைச் சுவாசித்து வாயையும் தொண்டையையும் சோடியம்-பை-கார்பனேட்டுக் கரைசலால் கழுவுதல் நலம் பகக்கும். இம்மாதிரியான சங் தர்ப்பங்களில் உடனே மருத்துவர் உதவியை நாடுதல் நன்று. - வேதியியற் பொருள்களை உட்கொள்ளுதலால் நேரிடும் விபத்துகள் : உட்கொண்ட பொருளே உடனே துப்பிவிட்டு வாயினே கீரினுல் நன்றது; கொப்புளித்துக் கழுவுதல் வேண்டும். பொருளே விழுங்கிவிட்டால் அதிை உடனே அகற்றுதல் மிகவும் இன்றியமையாதது. அரிக்கும்