பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-; உளவியல் உண்மை : ஆசிரியர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பல : நிறைவேற்றவேண்டிய கடமைகள் சில. அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சி முழுவதும் பயிற்றும் பாடங்களே மாளுக்கர்களுக்கு நன்கு புரியும்படி செய்வதேயாகும். அ.துடன் அவர்களிடம் சில திறன்களைக் கைவரச் செய்தலும் அவருடைய நோக்கமாக இருத்தல் வேண்டும். உளவியல் பயிற்சியுடைய ஆசிரியர் தன்னுடைய கடமைகளைத் தெளிவாக அறிவார். மக்கள் எவ்வாறு கற்கின்றனர் ? பல்வேறு தூண்டல்களுக்கேற்றவாறு எப்பொழுது எவ்வாறு துலங்கல்கள் ஏற்படுகின்றன ? கற்றலில் சரியான துலங்கல் ஏற்படவேண்டுமானல் என்னென்ன முறைகளையும் உபாயங்களையும் மேற்கொள்ள வேண்டும் , என்பன போன்ற செய்திகளே அவர் அறிந்திருத்தல் வேண்டும். இவற்றை நன்கு அறிந்திருந்தாலும் பல ஆசிரியர்கள் வெறும் சொற்களைக்கொண்டே கருத்துகளேத் தெரிவிக்க முற்படுகின்றனர். உவமை, உருவகம், ஏது, எடுத்துக்காட்டு போன்ற சில அணிவகைகஆர மட்டிலும் கையாண்டு கற்பிக்கின்றனர். மாளுக்கர்களுக்குச் சில கருத்துகளேயும், சில தகவல்களேயும் குறிப்பிட்ட கால எல்லேக்குள் தருவதே ஆசிரியரது கோக்கமாகும் ; இது கற்றல் விதிகளின் அடிப்படையில் அமைந்த தொன்று. இந் நோக்கம் கைவரப்பெறவும் கற்பனவற்றை மாளுக்கர்கள் தம் மனத்தில் உறுதியாகப் பதித்துக்கொள்ளவும் சில துணேக்கருவிகள் சாதனமாக மேற்கொள்ளப்பெறுகின்றன. இயன்றவரை பொருள் கள், பொம்மைகள், படங்கள், வரைப்படங்கள், சொற்கள் என்ற வரிசையில் இச்சாதனங்கள் அமைந்தால் சாலப் பயன்தரும் என்பது கல்வி அறிஞர்கள் கண்ட உண்மை. எனவே, கற்பித்தலில் இவற்றை மேற்கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது. அறிவியல் பாடங் களைப் பயிற்றுவதில் இவற்றை எவ்வாறு மேற்கொள்வது என்பதை ஈண்டு ஒரு சிறிது காண்போம். - 1. இவை பற்றிய முழுவிவரங்களை இந்நூலாசிரியர் எழுதி வெளிவர இருக்கும் "கட்புல - செவிப்புலக் கல்வி’ என்ற நூலில் கண்டு கொள்க.