பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-1 - #41 AMAMMAAASAASAASAASAASAASAASAASAAeMAMSMSMS கூடும். இயற்கைப் பாடப் பகுதிகளில் கீழ் வகுப்புகளில் இயற்கைப் பஞ்சாங்கம் ஒன்றை அவசியம் சேர்த்தல் வேண்டும். பாடநூல்களின் தேவை அறிவியல் பாடநூல்கள் மாளுக்கர் களுக்குத் தேவையா என்பதைக் குறித்து பல மாறுபட்ட கருத்துகள் கிலவுகின்றன. ஒரு சாரார் தேவை என்று கூறுவர் ; பிறிதொரு சாரார் அன்று என்று பகர்வர். இரு சாரார் கூறும் காரணங்களேயும் ஈண்டு எடுத்துக்காட்டுவோம். தேவை என்று கூறுவோரின் கருத்து தெளிவான மொழியில் சுருங்கக் கூறி விளக்குதல் எந்தப் பாடத்திற்கும் வேண்டியதொன்று. அறிவியல் பாடநூல் அதை நன்கு நிறைவேற்றுகின்றது. செய்திகள் ஒருவித ஒழுங்கில் கோவையாகத் தொகுக்கப்பெற்றிருத்தலால் மாளுக்கர்கள் நல்ல அறிவினே அடைய முடிகின்றது. வகுப்பில் ஆசிரியர் விளக்கியவற்றையே மrளுக்கர்கள் மீண்டும் வீட்டில் நூலில் படிக்கும் பொழுது பொருள் தெளிவு ஏற்படுகின்றது. நூல் இருந்தால் ஆசிரியர் குறிப்புகளே எழுதச் செய்து வகுப்பில் கற்பிக்கவேண்டிய நேரத்தை வீணுக்கத் தேவையில்லே. அப்படி எழுதிக் கொள்ளச் செய்தாலும் எல்லா மாணுக்கர்களும் பிழைகளின்றி எழுதிக் கொள்வர் என்று கினேத்தலும் தவறு தவருக எழுதிக் கொள்பவர் தவருன வற்றையே படித்துத் தவருன கருத்துகளேயே கொள்ள ஏதுவுண்டு. நூலினக் கொண்டு ஆசிரியர் கற்பித்தவற்றை எந்த நிலையிலும் வரையறை செய்து பார்க்க வசதியேற்படுகின்றது. மாளுக்கர்களோ ஆசிரியர்களோ ஒரு பள்ளியிலிருந்து பிறிதொரு பள்ளிக்கு மாற நேரிட்டால், மாணுக்கர்கள் நூல்களைப் படித்துச் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும் ஆசிரியர் நடந்திருக்கும் பகுதிகளே உறுதிசெய்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. பெரும்பாலான நூல்களில் ஒப்படைப்புகள் காணப்பெறுவதால் அவற்றை வீட்டு வேலையாகக் கொடுக்கப் பயன்படுத்தலாம். நூலே வீட்டில் படித்து வந்தால், வகுப்பில் மேற்கொள்ளப்பெறும் கலந்து ஆய்தலால் பொருள் தெளிவு அடைய முடியும். நூலிலுள்ள படங்கள், விளக்கப்படங்கள், வரைப் படங்கள் முதலியவற்றின் துனேக்கொண்டு மாளுக்கர்கள் தெளிவான அறிவைப் பெறலாம் , அவற்றைப்போல் தாமும் வரைய முனையலாம். சில நாட்கள் யாதோ ஒரு காரணத்தால் பள்ளிக்கு வர இயலாத மாளுக்கர்களும் வகுப்பில் நடந்தவற்றை வீட்டிலேயே படித்துக் கொள்வதற்குப் பாடநூல் துணையாக உள்ளது. அன்று எனக் கூறுவோரின் கருத்து பெரும்பான்மையான அறிவியல் பகுதிகள் உற்று நோக்கியும் செயல்கள் மூலமும் அறிந்து கொள்ளும் கிலேயில் இருத்தலால், நூல் தேவை இல்லையே என்று கூறுவர். ஆசிரியர் வேலையைக் குறைத்துக்கொள்ளப் பயன்பட்டாலும் ஆசிரியர் திருத்தமற்ற வேலே செய்யவும் பாட நூல் கருவியாக