பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 அறிவியல் பயிற்றும் முறை --- SAMSMSMSMSMAAA AAAASASASS مریم مس - م. ------حصر--حمام حساسی SSASASMMAMMMSMMMMMAMAMMMASMMAMMAMAMSMSMSMSMSAAAAAAAS 05:19, 10 பெப்ரவரி 2016 (UTC)~ یحیی حمایی حسی ..பார்மலின் மலிவாகக் கிடைப்பதால் அதை அதிகமாகப் பயன்படுத்து கின்றனர். இக் கரைசல் பிராணிகளின் உயிரணுத் தொகுப்பில் ஊடுருவிச் செல்லாததால் பிராணிகள் அழிந்து காற்றமெடுத்துக் கெட்டுவிடும். சில நாட்களில் பிராணிகள் சுருங்கிவிடும். ..பார்மலின் கரைசலில் பச்சை நிற அணுக்கள் கரைவதால் பச்சைப் பாம்பு போன்ற பிராணிகளே அதில் வைத்துப் பாதுகாக்க முடியாது. ஃபார்மலின் கையாளப்படுவதற்கு மு ன் ன ர் மெதிலேறு ஸ்பிரிட்டைப் (எரிநீர்) பயன்படுத்தினர். அதை நீரில் கரைக்காது அப்படியே பயன்படுத்துதல் வேண்டும். பிராணிகளின் நிறத்தை மாற்றுவதாலும், தனக்கென ஒரு நிறமிருப்பதால் பிராணிகளின் நிறத்தைத் தெளிவாகக் காட்டாததாலும், பிராணிகளின் உடலில் ஊடுருவிச் செல்லாததாலும், அதைப் பயன்படுத்தாமல் கைவிட்டனர். 40-70% உள்ள ஆல்கஹாலேயும் பயன்படுத்தலாம். இதல்ை யாதொரு குறையும் இல்லே , விலேதான் அதிகம். - உலர்ந்த முறை : வெயிற் காலத்தில் இம்முறையை மேற் கொள்ளுதல் வேண்டும். இப்படிச் செய்வதால் உலர்வதும் எளிது ; காளான் வளர்ச்சியும் நேரிடாது. தானியக் கதிர்கள், பலவித மரக்கட்டைகள், விதைகள், புற்கள், இலைகள், வேர்கள் முதலிய தாவர இனப்பொருள்களைச் சேகரித்து வைக்கலாம். இலேகள், புற்கள், பூக்கள் முதலியவற்றை மையொற்றும் காகிதத்தில் அழுத்தி வைத்துக் காயச் செய்து தொகுப்பொட்டிகளில் (Album) ஒட்டி வைக்கலாம். முட்டைகள், கூடுகள், இறகுகள், எலும்புக் கூடுகள், கொம்புகள், நகங்கள், சங்குகள், கிளிஞ்சல்கள், கோழிகள், பதனிட்டதோல்கள் முதலிய பிராணிஇனப் பொருள்களே ச் சேர்க்கலாம். பறவைகள், பிராணிகள் முதலியவற்றின் உடலிலுள்ள உட்பாகத்தை நீக்கிப் பஞ்சடைத்துப் பாதுகாப்பாக வைக்கலாம். . . தாது.இனப் பொருள்களாக வண்டல் மண், கரிசல் மண், களிமண், செம்மண், உவர்மண் ஆகிய மண்வகைகளையும் : பெருமனல், பொடி மணல், கருமணல், வெண்மணல், செம்மணல் முதலிய மணல்வகைகளே யும் கூழாங்கல், கருங்கல், சலவைக்கல், மாக்கல், சந்தனக்கல் முதலிய கல்வகைகளையும் சேர்த்து வைக்கலாம். மாளுக்கர்கள் செய்யும் களிமண்வேலே, காகிதவேலே, அட்டைவேலை, மரவேலை, நெசவுவேல முதலியவைபற்றிய கைத்தொழிற் பொருள்களையும், உள்ளூர்க் கைத்தொழிற்சாலைகளில் செய்யப்படும் பிறபொருள்களையும் பொருட்காட்சி கிலேயத்தில் வைக்கலாம். தபால் பில்லைகள், பலநாட்டு காணயங்கள், தீப்பெட்டிப் படங்கள், வரலாற்றுப் படங்கள், இயற்கைக் காட்சிப் படங்கள், ஒவியவேலைகள், சிற்பவேலைகள்