பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


158 அறிவியல் பயிற்றும் முறை.

சில பொருள்களைக் கண்ணாடியின் மீதும் பதித்து வைக்க வேண்டும், பாம்புக் குட்டிகள் போன்ற சிறிய பொருள்களைச் சாடியின் மூடியிலிருந்து தொங்குமாறு அமைத்தல் வேண்டும். தாது.இனப்பொருள்கள், கிளிஞ்சல், பவழம் போன்ற பொருள்கள் முதலியவற்றைக் கண்ணாடிப் பக்கமுள்ள சிறிய மரப் பெட்டிகளில் வைத்தல் வேண்டும்.

வகுப்புத் தேவை அமைப்பு : வகுப்பறைக்கு அடிக்கடி எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களேச் சிறிய மரப்பெட்டிகளில் பதித்து வைத்தால் எளிதாக எடுத்துச் செல்லலாம். எடுத்துக்காட்டாக பல்வேறு வகை வண்ணாத்திப் பூச்சிகளையும் அவற்றின் பல்வேறு வளர்ச்சிப் படிகளையும் விளக்கும் வகையில் பொருள்களே நெட்டியை அடிப்புறமாக அமைத்த ஒரே பெட்டியில் சேர்த்துப் பதித்து வைக்கலாம். வண்ணாத்திப்பூச்சி, சிலந்திப்பூச்சி, குச்சிப்பூச்சி, இலைப் பூச்சி, பச்சோந்தி போன்றவற்றை அவை வாழும் தாவரப் பகுதியுடன் எடுத்துத் தக்க முறையில் பதித்து ஒரு சிறிய அலமாரியில் வைத்தால் பிராணிகளின் தற்காப்புச் சாதனங்களை விளக்குவதற்குப் பயன்படுத்தலாம். இவ்வாறு வகுப்பில் நடைபெறும் பாடங்களுக்கேற்றவாறு அமைத்து வைத்தால், அவற்றை வகுப்பறைகளில் எளிதாகக் காட்ட வசதியாக இருக்கும்.

சூழ்நில அமைப்பு : செருமானியர் இம்முறையில் அமைப்பதைச் சிறப்பாக மேற்கொள்கின்றனர். ஓர் அறையில் வனத்தின் இயற்கைச் சூழ்நிலையைக் காட்டவல்ல வண்ணத் திரையைப் பின்னணியாக அமைத்து அதன் முன்புறத்தில் சிங்கம், புலி, சிறுத்தை, மான், அவற்றின் குட்டிகள் முதலியவற்றின் உடல்களை அழகான முறையில் வைப்பர். இந்த அமைப்பு பிராணிகள் வாழும் இயற்கைச் சூழ்நிலையை எளிதாக விளக்குதல்கூடும். புதர்கள், பொந்துகள் போன்ற காட்சிகளை அமைத்த சாதனத்தைப் பின்னணியாக வைத்து அவற்றிற்கு முன்புறம் ஒரு மரக்கிளையை அமைத்து அதில் பஞ்சடைத்த பறவைகளின் உடல்கள், அவற்றின் கூடுகள், முட்டைகள் முதலியவற்றைப் பொருத்தி வைப்பர். ஒரு மலையையும் அதிலுள்ள நீர் நிலையையும் காட்டும்படியான படத்தைப் பின்னணியாக அமைத்து அதன் முன்புறம் தாவர இனப் பொருள்களையும் பிராணி இனப் பொருள்களையும் அழகாக வைக்கலாம்.

உயிருள்ள பிராணிகள் : பள்ளிப் பொருட்காட்சி நிலையத்தில் செல்வப் பிராணிகளே வளர்த்தலையும் ஒரு பகுதியாகச் சேர்க்கலாம். பூனை, நாய், முயல், புறா, மைனா, கோழி முதலியவற்றை இங்கு வளர்க்கலாம். தேன்கூடு அமைத்துத் தேனீ வளர்த்தலேயும் மேற்கொள்ளம்