பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#84 அறிவியல் பயிற்றும் முறை அறிவதும் அவற்றிடையே பொதுமையாக உள்ளவற்றை அறிவதும் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்பெறுகின்றன. அறிவியல் கற்றலில் மாளுக்கர்கள் இவற்றை அடைதல் வேண்டும். எனவே, உறவு முறைகளே அளக்கக் கூடியவாறு சோதனைகள் அமைதல் வேண்டும். 3. பிரச்சினைகளைத் தீர்த்தல் : அறிவு அநுபவமாக மாறும்பொழுது தான் அது வாழ்க்கையில் பயன்படுகின்றது. அறிவியல் மெய்ம்மைகள் வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை மாணுக்கர்கள் அறிந்தால்தான், அறிவியலின் முழுப் பயனேயும் எய்தப்பெறுவர் : அறிவியல் சிந்தனையையும் அடைவர். எனவே, அறிவியல் முறைகளே விளக்கக் கூடியவாறும் சோதனைகளே ஆயத்தம் செய்தல் வேண்டும். 4. மனப்போக்கும் கவர்ச்சியும் : இவற்றை அளப்பது மிகவும் கடினம். கவர்ச்சிகள் யாவை : மனப்போக்குகள் யாவை ? என்பவற்றைப்பற்றி இன்னும் திட்டமாக வரையறை செய்யப் பெருததால், அவற்றைச் சரியாக அளக்க முடிவதில்லே. அன்றியும், அவற்றை அளக்கும் முறைகளையும் இன்னும் சரியாகக் கண்டறியவில்லை. என்ருலும், ஒரு சில முன்னேற்றமான கூறுகள் கண்டறியப்பெருமலும் இல்லை. அவற்றையும் ஒரளவு சோதனைகள் அளத்தல் வேண்டும். இவ்வாறு பல்வேறு கூறுகளே அளக்கக் கூடிய பல்வேறு சோதனைகளே சாண்டர்ஸ் என்பார் எழுதியுள்ள பொது அறிவியல் கற்பித்தல்’ என்ற நூலில் காண்க." கடைமுறையிலுள்ள தேர்வுகள் : இன்று அறிவியல் கற்பித்தலில் கீழ்க்கண்ட சோதனைகள் நடைமுறையிலிருந்து வருகின்றன : (1) வாய்மொழிச் சோதனைகள்: - (2) எழுத்துமுறைச் சோதனைகள்: (அ) பழைய கட்டுரை முறைச் சோதனைகள்: (ஆ) புதுமுறைச் சோதனைகள்: (3) செயல் முறைச் சோதனைகள். இவை ஒவ்வொன்றையும்பற்றி ஈண்டு ஒரு சிறிது ஆராய்வோம். வாய்மொழித் தேர்வுகள் : வாய்மொழி வினுக்களைக்கொண்டு எதையும் முடிவான கிலேயில் அளந்து காணல் இயலாது. ஆழ்ந்த அநுபவம் மிக்க ஆசிரியர்களாலும் இதைத் திறம்படக் கையாள முடியாது. எனவே, இவற்றை அறிவியல் பயிற்றுதலில் மேற் கொள்வதில்லை. ஆல்ை, வாய்மொழி விளுக்களால் யாதொரு பயனும் இல்லை என்று முடிவு கட்டுதலும் தவறு. அவற்றை அளத்தல் கருவியாக மேற்கொள்வதைவிடக் க ற்பிக்கும் கருவியாக மேற் கொண்டால் நிறைந்த பயனே அடையலாம் என்பது முறை வல்லார் 1. Saunders, H. N. . The Teaching of General Science in Tropical Modern Secondary schools : Chap. VIII.