பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

45. புகைப்பனி என்றால் என்ன?

இதில் தடித்த கரும் புழுதியும் புகைக்கரி படிந்த கந்தகமும் இருக்கும். சாதகக் காற்று வெளி நிலைமைகளில் தொழிற்சாலை நகரங்களில் காற்றை மாசுப்படுத்துவது. நுரையீரல்களைப் பாதிப்பது.

46. புகை என்றால் என்ன?

வளியிலுள்ள நேர்த்தியான திண்மத் துகள்களின் தொங்கல். நிலக்கரிப்புகை முதன்மையாகக் கரித் துகள்களாலானது. மாசுபடுத்துவது.

47. பனிமூட்டம் என்றால் என்ன?

வளிநிலையிலுள்ள கூழ்மத் தொங்கல். குளிர்ந்த நீர்த்துளிகளாலானது.

48. பனிப்புயல் என்றால் என்ன?

காற்றுவெளியின் உயர்பகுதிகளிலுள்ள காற்று விரைந்து குளிர்ச்சியடையும். இப்பொழுது அங்குள்ள நீராவியானது நேரடியாக உறைந்து பனிப்படிகங்கள் ஆகின்றன. இவையே பனிப்புயலாக மாறுபவை.

49. மழை என்றால் என்ன?

காற்றுவெளி ஈரம் சுருங்கி நீர்த்துளிகளாக விழுவது.

50. கோரியாலி விசை என்றால் என்ன?

காற்று, நீர், எரிபொருள்கள் முதலிய சுழல்தொகுதிகளில் கணக்கீடுகளை எளிமையாக்கச் சில சமயங்கள் பயன்படும் கற்பனை விசை. பிரஞ்சு இயற்பியலார் கோரியாலி 1835இல் முதன்முதலில் இக்கருத்தைப் பயன்படுத்தினார்.5. இயக்கவியலும் எந்திரவியலும்


1. இயக்கவியல் என்றால் என்ன?

விசைகளின் வினையால் பொருள்கள் எவ்வாறு அசைகின்றன என்பதை ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு.

2. விரைவு என்றால் என்ன?

ஒரு வினாடியில் பொருள் கடக்கும் தொலைவு

20.3.