பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36


பொதுவான ஒர் அடிப்படை .


2. இனப்பெருக்க வகைகள் யாவை?

1. பாலினப்பெருக்கம் - கலவி இனப்பெருக்கம். உயரின உயிர்கள். 2. பாலிலா இனப்பெருக்கம் - கலவியிலா இனப்பெருக்கம் - கீழின உயிர்கள்.

3. பாலிலா இனப்பெருக்கம் என்றால் என்ன?

கலவியிலா இனப்பெருக்கம். சிதல்கள், தண்டு, இலை முதலியவை மூலம் நடைபெறுவது.

4. தாவரங்களில் கலவியிலா இனப்பெருக்கம் எவற்றால் நடைபெறுகிறது?

விதைகளுக்கு முன்னோடிகளான சிதல்கள் (ஸ்போர்கள்) என்பவற்றால் நடைபெறுகிறது.

5. தாவரங்களில் நடைபெறும் உறுப்பு இனப்பெருக்க முறைகள் யாவை?

1. அரும்புதல். 2. போத்து நடுதல். 3. பதியன் போடுதல்.

6. தாவரக்கலப்பு நுணுக்கங்கள் யாவை?

1. தேர்ந்தெடுத்தல். 2. உட்பெருக்கம். 3.கலப்பினமாக்கல். 4. தாவர அறிமுகம். 5.பெற்றோர் கலப்புப் பெருக்கம். 6. பன்மயம். 7. சடுதிமாற்றம்.

7. தற்கலப்பு என்றால் என்ன?

இது தற்கருவுதலாகும். இதில் ஒரே உயிரின் ஆண் பாலணுவும் பெண் பாலணுவும் சேர்தல். வேறுபெயர்கள் தற்கருவுறுதல், அகக்கலப்பு.

8. போலிக்கலப்பு என்றால் என்ன?

ஆண் பாலணுவின் துண்டலினால் முட்டை வளர்ந்து புதிய உயிர் உண்டாதல். இதன் உட்கரு முட்டையின் உட்கருவோடு சேர்வதில்லை. சில உயரினத் தாவரங்களிலும் இழைப்புழுக்களிலும் இக்கலப்புண்டு.

9. கலப்பினமாதல் என்றால் என்ன?

வீறுள்ள வேறுபட்ட கால்வழிகளைச் சேர்த்தல். எ-டு ஆடுதுறை நெல்வகை.