பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38


19. தன்னொட்டு என்றால் என்ன?

ஒர் உயிரியின் உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குத் திசுவை மாற்றுதல்.

20. பதியம் போடுதல் என்றால் என்ன?

இனப்பெருக்க முறைகளில் ஒன்று. கிளையை மண்ணில் பதிய வைக்க அது வேரோடிப் புதிய செடியை உண்டாக்கும். எ-டு. ரோஜா.

21. ஒட்டுதல் என்றால் என்ன?

உறுப்பு இனப்பெருக்க முறைகளில் ஒன்று. இரு தாவரச் செடிகளைச் சேர்த்து ஒரு புதிய செடியை உண்டாக்கலாம். எ-டு. மா, கொய்யா. விரைவான வளர்ச்சியை உண்டாக்குவது.

22. ஒட்டின் வகைகள் யாவை?

1. தண்டு ஒட்டு - மா. 2. மொட்டு ஒட்டு - ரோஜா. 3. அரும்பொட்டு - கொய்யா.

23. அரும்பு என்றால் என்ன?

பாலில்லா முறையில் ஒரு புதிய உயிராக வளரும் தாவரநீட்சி. இதில் கணுவிடைகள் நீளாதிருக்கும். இது உறுப்பு அரும்பாக இருந்தால் இலையாகவும், பூவரும்பாக இருந்தால் பூவாகவும் மாறும்.

24. அரும்பின் பல வகைகள் யாவை?

1. கோண அரும்பு.
2. நுனியரும்பு.
4. மருங்கு அரும்பு.
5. உறையரும்பு.
6. மாறியரும்பு.

25. அரும்புதல் என்றால் என்ன?

மொட்டுவிடுதல். பாலில்லா இலைபெருக்க முறைகளில் ஒன்று.

26. அரும்பொட்டு என்றால் என்ன?

உறுப்பு இனப்பெருக்கம். கலவி இல்லை. இதில் திட்டமிட்டபடி ஒர் அரும்பு விலக்கப்பட்டு மற்றொரு