பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71


முன்கணியம் (புரோட்டோபிளாசம்)

8. முன்கணியம் எவ்வாறு பிரிந்துள்ளது?

கண்ணறைக் கணியமாகவும் (சைட்டோபிளாசம்) கண்ணறைச் சுவராகவும் பிரிந்துள்ளது.

9. கண்ணறைக் கணியத்தின் சிறப்பென்ன?

இது கண்ணறையின் செயற்களம். இதில் கணிகங்கள், கோல்கைப்பொருள்கள், நுண்புரிகள், இழையன்கள், உட்கரு ஆகியவை உள்ளன.

10. உட்கருவின் சிறப்பு யாது?

இது உயிரணுவின் கட்டுப்பாட்டு மையம். இதில் நுண்கரு நிறப்புரிகள், மரபணுக்கள் ஆகியவை உள்ளன.

11. உயிரணுவின் மரபணுக்களில் காணப்படும் விந்தைப் பொருள்கள் யாவை?

டிஎன்ஏ, ஆர்என்ஏ.

12. டிஎன்ஏவின் வேலை என்ன?

1. மரபுப் பண்பை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்வது.

2. புரதச் சேர்க்கையைக் கட்டுப்படுத்துவது.

13. ஆர்என்ஏவின் வேலை என்ன?

இவ்விரு வேலைகளுக்கும் டிஎன்ஏவுக்கு உதவுவது இது.

14. கண்ணறைச் சேர்ப்புப் பொருள்கள் யாவை?

இவை கரிமப் பொருள்களும் கனிமப்பொருள்களும் ஆகும். வளர்சிதை மாற்ற வினைப்பொருள்களும், சேமிப்புப் பொருள்களும் ஆகும்.

15. கண்ணறைப் படலம் என்றால் என்ன? வேலை என்ன?

கண்ணறையின் வெளிப்புற எல்லையாக ஒருவழி ஊடுருவுப்படலம். பொருள்கள் உள்வருவதையும் வெளிச்செல்வதையும் கட்டுப்படுத்துவது. கண்ணறைச் சுவராக்கத்தில் சிறந்த பங்குபெறுவது. விலங்குக் கண்ணறை, தாவரக் கண்ணறை ஆகிய இரண்டிலும் உள்ளது.

16.விலங்குக் கண்ணறைக்கும் தாவரக் கண்ணறைக்குமுள்ள வேறுபாடுகள் யாவை?