பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78


 வளருகின்ற தன்மையை ஒட்டித் தாவரங்கள் செடிகள் (கத்தரி), கொடிகள் (அவரை), குற்றுமரங்கள் (மூங்கில்), மரங்கள் (மா) எனப் பலவகைப்படுதல்.

8. வளரிடம் அல்லது வாழிடம் என்றால் என்ன?

உயிரி இயல்பாக வாழுமிடம். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு இதுவேறுபடும். இது நீர் அல்லது நிலமாக இருக்கலாம்.

9. அளவறி பண்புகள் யாவை?

ஒரு சூழ்நிலைத் தொகுதியிலுள்ள கூட்டத்தில் இயல்புகளை ஆராய்வது. தொகை, செறிவு, அதிர்வெண், மிகுமை, ஓங்கல் ஆகியவை இந்த ஆராய்ச்சியின் ஆய்பொருள்களாகும்.

10. சூழினம் என்றால் என்ன?

இது ஒரு வளரிட வாழ்வி. ஓர் உயிர் வகைத் தொகை.

11. உயிரியல் காரணிகள் என்றால் என்ன?

இவை சூழ்நிலைக் காரணிகள். உயிர்களுக்கிடையே தொடர்புகளை உண்டாக்குபவை. இவையாவன.

1. மேய்ச்சல்.
2. ஒட்டி வாழ்விகள்.
3, ஒட்டுண்ணிகள்.
4. கூட்டுயிரிகள்.
5. பூஞ்சை ஊட்டம் அல்லது பூஞ்சை வாழ்வு.

12. கட்டுப்பாட்டுக் காரணிகள் யாவை?

இவை வெட்டுக்கிளி, பறவை, தவளை முதலியவை. சூழ்நிலைத் தகவும் சிக்கனமுடையதுமான நெல் பண்ணையை உருவாக்க உதவுபவை.

13. நன்னீரியல் என்றால் என்ன?

நன்னீர் அதன் திணைத்தாவரம், விலங்கு ஆகியவைபற்றி ஆராயுந்துறை. சூழ்நிலை இயல் சார்ந்தது. இதில் வாழ்பவை நன்னீர் வாழ்விகள். எ-டு. மீன்கள்.

14. உப்புநீர் என்றால் என்ன?

கடல்நீர் ஆகும். இதில் வாழ்பவை கடல்நீர் வாழ்விகள். எ-டு திமிங்கிலம்.

15. சூழ்நிலைக்கு இணக்கமாதல் என்றால் என்ன?