பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84



இது தேசியச்சூழ்நிலைப் பொறியியல் நிறுவனம் (National Environmental Engineering Institute), சூழ்நிலையைக் கண்காணிக்கும் அமைப்பு, சென்னையில் உள்ளது.

54. ரியோ புவி உச்சி மாநாடு என்பதின் சிறப்பு யாது?

1992இல் உலக அளவில் ஐ.நா. சார்பாகப் பிரேசிலில் நடந்த சூழ்நிலைப் பாதுகாப்பு மாநாடு.

55. உலக உணவுப் பாதுகாப்பு அமைப்பு என்றால் என்ன?

சூழ்நிலை மற்றும் சமூகக் காரணிகளால் இது இடருக்கு உட்பட்டுள்ளது. இதை அரசியல் பார்வையாலும் மக்கள் செயலினாலும் மட்டுமே வெல்ல இயலும் என்பது வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் கருத்து.

56. உலகச் சூழ்நிலை நாள் என்றால் என்ன?

1992க்குப் பின் ஒவ்வோராண்டும் ஜன் 5 சூழ்நிலையின் இன்றியமையாமை, அது பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை உணர்த்தக் கொண்டாடப்படுவது.

57. உலகநாள் ஒவ்வோராண்டும் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

ஒவ்வோராண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் சூழ்நிலையைப் பாதுகாப்பதே. 1970ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.

58. ஓடுங்கல் என்றால் என்ன?

குறிப்பிட்ட காலம் வளர்சிதை மாற்றச் செயல்கள் குன்றியிருத்தல். இதனால் உறுப்பு மூலம் உயிரிகள் பாதகச் சூழ்நிலைகளைத் தாக்குப் பிடிக்கும். எ-டு விதைகள், இருபருவத் தாவரங்கள்.

59. காடுகள் என்பவை யாவை?

சாகுபடி செய்யப்படாததும் மனிதத்தலையீடு அதிகமில்லாதவையுமே காடுகள்.

60. இவற்றை உண்டாக்கும் காரணிகள் யாவை?

1. தேவையான அளவு இடம்.
2. வெப்பம்.
3. மழையளவு.