12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
101
கடல் ஆராய்ச்சி செய்யும் பிற பல்கலைக் கழகங்கள் யாவை? சென்னை, திருவனந்தபுரம், பம்பாய் முதலிய பல்கலைக் கழகங்களும் கடல்துறை ஆராய்ச்சிகள் செய்கின்றன. கடல் ஆராய்ச்சிக்கு உதவும் மைய அரசு அமைப்பு எது? அறிவியல் - தொழில் ஆராய்ச்சி மன்றம். ஜக்கார்ஜி-92 என்றால் என்ன? இது ஒரு மூன்றுநாள் மாநாடு. நேரு தொழில்நுணுக்கப் பல்கலைக் கழகத்தில் 1992 பிப்ரவரியில் நடைபெற்றது. தொலையறிதல், புவிச் செய்தி அமைப்பு இரண்டும் பற்றி ஆராய்ச்சி நடைபெற்றது. அனைத்துலக வான வெளி ஆண்டுத் தொடர்பாக நடைபெற்றது. இன்மார்சட் என்பது யாது? இது அனைத்துலகக் கப்பல் நிலா. தகவல்களை உடனுக் குடன் கப்பல்களுக்கு அளிப்பது. தொலையறிவியல் என்றால் என்ன? செயற்கை நிலாக்கள் மூலம் செய்திகள் சேகரிப்பதை ஆராயுந்துறை.
இது எப்பொழுது உருவாகியது? 1970களில் வானவெளி ஆராய்ச்சியால் உருவாகியது. இதன் பயன்கள் யாவை? கப்பல் போக்குவரத்திற்கும் கடல் ஆராய்ச்சிக்கும் வானிலை முன்னறிவிப்பிற்கும் பெரிதும் பயன்படுவது. இவ்வறிவியலில் வல்லவர் யார்? டாக்டர் நாராயணன். இந்தியா ஏவும் இவ்வறிவியல் நிலாக்களுக்கு என்ன பெயர்? ஐஆர்எஸ் நிலாக்கள். 1970க்குப் பின் கடல் பற்றிக் கிடைத்த புதிய செய்திகள் யாவை?
1. ஒரிமம் - இரும்பு-60 என்னும் ஒரிமம் (ஐசோடோப்பு) கடல் தரையில் நிரம்ப உள்ளது. 2. ஆழமான வாஸ்தோக் ஏரியின் அடியில் குச்சி வடிவ உயிரிகள் வாழ்கின்றன. எ-டு. பைரே லோபஸ் பியுரேட் 113' செ. வெப்பநிலையில் வாழ்வது வியப்பிற்குரியது.
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/103
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
