பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. 13. 14. 15. 16. 10 ஜெர்மன் நாட்டுப் படத் தயாரிப்பாளர் யார்? அவர் குறிப்பிடத்தக்க பணி யாது? மார்டின் வால்டு சீமுல்லர் (1470 -1521). 1507இல் உலகப் படத்தை உருவாக்கினார். புவி இயல் ஒரு கல்விப் பாடமாவதற்குரிய தகுதிகளை அளித்தவர் யார்? பெர்ன்ஹார்டஸ் வெரினியல் (1622 - 1650). இவர் தம் பொதுப் புவி இயல் என்னும் நூலை 1650இல் வெளியிட்டார். இதில் வட்டாரப் புவி இயல், நடைமுறைப் புவி இயல் ஆகிய துறைகளின் கருத்துகளை நிறுவினார். 19 ஆம் நூற்றாண்டில் புவி இயலின் நிலை என்ன? புவி இயல் ஒரு வண்ணனை அறிவியலாக இருந்தது. இக்காலப் புவி இயலை நிறுவியவர்கள் யார்? அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் கார்ல் ரிட்டர் அலெக்சாண்டர் ஹம்போல்ட் பங்களிப்பு என்ன? இவர் தாவரப் புவிஇயலை நிறுவியவர். விண்ணகம் (1845 - 1862) என்னும் 5 தொகுதி நூலை எழுதியவர். கார்ல் ரிட்டர் பங்களிப்பு என்ன? இவர் மனிதப் புவி இயலை அறிமுகப்படுத்தியவர். 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க புவி இயலார் யார்? எலன் சர்ச்சில் செம்பிள். 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய இரு வகைப் புவி இயல் கொள்கைகள் யாவை? 1. சூழ்நிலைக் கொள்கை 2. இயலுமைக் கொள்கை சூழ்நிலைக் கொள்கை என்றால் என்ன? மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் அவன் வளர்ச்சியை உறுதி செய்வது சூழ்நிலையே. இக்கொள்கையை வற்புறுத்தியவர் யார்? எல்ஸ்வொர்த் ஹிண்டிங்கடன்.