40. 41. 42. 45. 44. 45. 46. 47. 125 இச்சமவெளியின் சிறப்புகள் யாவை? 1. ஒரு குறுகிய நீண்ட சமவெளி 2. மேற்குத் தொடர்ச்சி மலையில் மேற்குச் சரிவில் உற்பத்தியாகும் ஆறுகள் இச்சமவெளியில் பாய்கின்றன. 3. இந்த ஆறுகளின் நீளம் குறைவு, விரைவு அதிகம் எனவே, பல இடங்களில் நீர்மின் நிலையங்கள் உள்ளன. 4. இதன் வடகரை கொங்கணக்கரை, தென்பகுதி மலபார் கரை. தக்காணப் பீடபூமி எங்குள்ளது? இது தீபகற்ப இந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும் இடையிலுள்ளது. பழங்காலக் கடினப்பாறைகளாலான முக்கோண வடிவப் பீடபூமி. இப்பீட பூமியில் உள்ள மாநிலங்கள் யாவை? இதன் வடபகுதியில் மராட்டிய மாநிலமும். வடகிழக்குப் பகுதியில் சோட்டா நாகபுரி பீடபூமியும் உள்ளன. இதன் தெற்குப் பகுதியில் கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன. இப்பீடபூமியில் அமைந்துள்ள இரு மலைத் தொடர்கள் யாவை? மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சிமலை. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள உயரமான சிகரம் எது? ஆனைமுடி இதன் உயரம் 2695 மீ.நீளம் 1600 மீ. அகலம் 1200 - 2440 மீ. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள் யாவை? தால்காட் போர்காட், தார்வார், பாலக்காடு. மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் எங்குச் சந்திக்கின்றன? நீலகிரி மலைகளில் சந்திக்கின்றன. இந்தியாவின் நான்கு காலநிலைப்பருவங்கள் யாவை? 1. கோடை மார்ச் - மே, 2. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம்: ஜூன் செப்டம்பர்.
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/125
Appearance