பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. 149 கதிரவன் மின்கலங்கள் என்றால் என்ன? இவை அரைகுறைக் கடத்திகள். பகலவன் கதிர்வீச்சு களை மின்னாற்றலாக மாற்றுபவை? இதன் வகைகள் யாவை? 1. சிலிகன் மின்கலங்கள் - ஒளிக்கதிர்கள் படும்பொழுது வேலை செய்பவை, மின்னாற்றலை உண்டாக்கும். 2. செலீனியம் மின்கலங்கள் - வெப்பக்கதிர்கள் படும் பொழுது, மின்னாற்றலை உண்டாக்குபவை. கதிரவன் மின்கலம் எப்பொழுது வேலை செய்கிறது? இதில் பகலவன் கதிர்வீச்சுகள் படும்பொழுது, அவற்றின் பொலிவுக்கேற்ப மின்னோட்டம்களை உண்டாக்க வல்லது. கதிரவன் வெப்பமூட்டல் என்றால் என்ன? வீடு அல்லது தொழிற்சாலையில் கதிரவன் ஆற்றலால் வெப்பம் பெறுதல். இதற்குக் கதிரவன் அடுப்பு அல்லது வெப்பமூட்டியைப் பயன்படுத்தல். கதிரவன் மின்கலத்தின் நன்மைகள் யாவை? 1. இரைச்சலை உண்டாக்குவதில்லை 2. எரிபொருள் தேவை இல்லை. 3. இதில் மின்னியக்கு விசையை ஒளிக்கதிர்கள் உண் டாக்குகின்றன. 4. சூழ்நிலைத் தகவுள்ளது. கதிரவன் மின்கலங்கள் எவற்றில் பயன்படுகின்றன? செயற்கை நிலாக்களில் பயன்படுகின்றன. இவற்றின் ஒரே ஒரு குறைபாடு என்ன? பகலவன் ஒளி இல்லை என்றால் வேலை செய்யா. கதிரவன் ஆற்றல் என்றால் என்ன? கதிரவன் ஒர் இயற்கை ஆற்றல் மூலம். அதன் உட்பகுதி மீ வெப்ப நிலையில் இருக்கும் பொழுது, அணுக்கருச் சேர்க்கையினால் ஒவ்வொரு வினாடியும் 43 மில்லியன் டன் நிறையுள்ள பொருள் அற்றலாக மாறுகிறது. இதனால் 3.8 x 10 கிலோவாட் ஆற்றல் கிடைக்கிறது. இந்த ஆற்றல் எந்த வடிவத்தில் வெளிப்படுகிறது?