46. 47. 48. 49. 50. 51. 52. 55. 51 பணியாறுகளின் வேலைகள் யாவை? 1. தாங்கள் நகரும் நிலத்தில் அரிப்பை உண்டாக்குதல். 2.நிலத்திற்குக் கீழுள்ள பாறைத் துகள்களைப் பனிக்கட்டி இழுக்கிறது. மேலிருந்து பாறைத்துண்டுகள் பனிக்கட்டி யில் விழுகின்றன. இத்துண்டுகள் பனிக்கட்டியில் உறை கின்றன. 3. பணியாறு நகரும் பொழுது, பாறைத் துண்டுகள் நிலத்திற்கு எதிராக உராய்கின்றன. இதனால் நிலத்தில் அரிப்பு ஏற்படுகிறது. 4. பனிக்கட்டி உருகும்பொழுது, பாறைத்துண்டுகள் தரையில் விழுகின்றன. இவை பணியாற்று வண்டல் எனப்படும். மொரைன்கள் என்றால் என்ன? தளர்ந்த பாறைத்துகள் நகரும் பணியாற்றின் மேல் விழுகின்றன. இவையே மொரைகள். பனிப்பாறை என்றால் என்ன? கடல் நோக்கி பணியாறுகள் ஒடும்பொழுது, பெரும் பனிக்கட்டித்துண்டு முறிந்து மிதக்கும். இவையே பனிப்பாறைகள். பனிப்பாறையின் அதிக உயரம் என்ன? 167 மீட்டர். இது நீருக்கு மேலுள்ளது. நீருக்குக் கீழ் ஒரு கிலோ மீட்டர் உயரம் இருக்கும். மிகப்பெரிய பனிப்பாறை எப்பொழுது காணப்பட்டது? 1956 இல் அண்டார்க்டிகாவிற்கு அருகில் காணப்பட்டது. இதன் பரப்பு 31,000 ச.மீ. பனிப்பாறையின் தீமை யாது? கப்பல் மோதி அழிவுற வாய்ப்புண்டு. பனிப்பாறையின் வகைகள் யாவை? 1. பலகை வடிவம் 2. கூம்பு வடிவம் 3. சமமுள்ளதும் கூர்மையும் உள்ள வடிவம். ஆர்க்டிக், அண்டார்க்டிக் இவை இரண்டில் மிகக் குளிர்ச்சியானது எது?
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/53
Appearance