பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 59. 60. 61. 62. 63. 64. 65. 67 எரிமலைக் குழம்பு என்றால் என்ன? எரிமலையிலிருந்து வெளிவரும் பாறைக் குழம்பு. இது காடித்தன்மையோ காரத்தன்மையோ பெற்றிருக்கும். பாறைக்குழம்பு (magma) என்றால் என்ன? உருகிய சிலிகேட் பொருள். குறிப்பிட்ட ஆழத்தில் புவி ஒட்டிற்குக் கீழ் இருப்பது. நீர்மமாக இருக்கும். எல்லா பாறைகளின் தாய்ப் பொருள் இது. எரிமலையின் நன்மைகள் யாவை? 1. இதன் குழம்பு படிந்து ஆறும்பொழுது அப்பகுதி செழிப்புள்ளதாகிறது. இதிலுள்ள கணிப்பொருள்களே இதற்குக் காரணம். 2. எரிமலை ஆராய்ச்சி புவியின் உள்ளமைப்பை ஆராய வும் எரிமலை முன்னறிய்வு செய்யவும் பயன்படுவது. 3. எரிமலை நீர்கள் மூட்டழற்சி வலியைப் போக்குபவை. 4. சுற்றுலா இடமாக இருந்தால் அந்நியச் செலாவணி. 5. ஒய்ந்தொழிந்த எரிமலைகள் கனிவளம் கொண்டவை. எரிமலையின் தீமைகள் யாவை? 1. உயிர்ச்சேதம் உடைமைச் சேதம். ஐந்து மைல் ஆர அளவுக்குப் பயிர்கள் சேதமுறும். 2. மக்கள் இடம் பெயரல். 3. எரிமலைக் கழிவுகள் பல மைல் அளவுக்குக் காற்றில் து.ாக்கி எறியப்படுதல். காட்டாகத் தால் எரிமலை வெடித்தபொழுது, அதன் அருகிலுள்ள உற்று நோக்கு ஆராய்ச்சி நிலையம் 10 அடி மீட்டர் சாம்பல் உயரத்தில் புதைந்தது. எரிமலைஇயல் ஆராய்ச்சி எப்பொழுது தொடங்கியது? 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. எரிமலை ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க அறிஞர்கள் யார்? அம்போல்டு டி தாரோட்சன், ஜி.கே. கில்பர்ட் எரிமலைகள் இல்லாத பகுதிகள் யாவை? பிரிட்டிஷ் தீவு, இந்தியா. ஸ்காட்லாந்தில் எத்தகைய எரிமலைகள் உள்ளன? ஒய்ந்தொழிந்த எரிமலைகள் உள்ளன.