பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. 22. 23. 24. 25. 26. 90 இரண்டாம் உலகப் போரின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது உருவாகியது. இது அமைதி நாடி விட்ட கூட்டு அறிக்கை.1941இல் பிரிட்டன் பிரதமர் சர்ச்சிலும் அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்ட்டும் சேர்ந்து விட்ட அறிக்கை. அனைத்து நாடுகள் நலங்கருதி விடப்பட்ட அறிக்கை. அட்லாண்டிக் நகரத்தின் சிறப்பென்ன? அமெரிக்காவில் நியூஜெர்சேயில் உள்ளது. கடலுக்கு அருகிலுள்ள சிறந்த தங்குமிடம். அண்டார்க்டிக் கண்டத்தை ஆராய்ந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் யார்? கேப்டன்குக், ராஸ், நேர்ஸ், கிறிஸ்டன்சன், ஷேக்கில்டன், அமுண்ட்சன், ஸ்காட், பயர்டு ஆகியோர். அண்டார்க்டிக் வரலாற்றிலேயே எப்பொழுது சிறப்பாக ஆராயப்பட்டது? 1957 - 1958இல் நடைபெற்ற நில இயற்பியல் ஆண்டுத் திட்டத்தின் போது நன்கு ஆராயப்பட்டது. அண்டார்க்டிக் பெருங்கடலின் முக்கிய நீரோட்டங்கள் யாவை? - அண்டார்க்டிக் நகர்வு நீரோட்டம், மேற்கு நீரோட்டம் பெருவியன் நீரோட்டம். மைத்ரி என்பது யாது? அண்டார்க்டிக்கில் இந்தியாவிற்குரிய நிலையான ஆராய்ச்சி நிலையமாகும். அண்டார்க்டிக் பெருங்கடலில் ஏற்படும் ஒலிகளுக்குக் காரணமென்ன? - இக்கடலில் ஒலிகள் உருவாகின்றன. அவை சீழ்க்கை ஒலியாகவும் இரைச்சல் ஒலியாகவும் பீப் ஒலியாகவும் உள்ளன. இவற்றிற்குக் காரணம் வெடல் கடலில் வாழும் சீல்களே. தங்களுக்குள் செய்தி தெரிவிக்கவே அவை இந்த ஒலிகளை எழுப்புகின்றன என்று திமிங்கில - கீல் ஒலி ஆராய்ச்சி வல்லுநர் ட்ாக்டர் வில்லியம் விவில் கூறுகின்றார்.