பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. 28. 29. 50. 31. 32. 33. 54. 91 அண்டார்க்டிக்கின் முதல் நாட்டுப்படச் சுவடியை உருவாக்கிய நாடு எது? சோவியத்து உருசியா. விண்கதிர்கள் என்பவை யாவை? விண்வெளியில் தோன்றும் கதிர்கள். இக்கதிர்கள் பற்றி அண்டார்க்டிக் ஆராய்ச்சியின் முடிவென்ன? விண்கதிர்களின் வழிகளில் மாற்றங்கள் காணப்படு கின்றன. விண்கதிர்களின் நிலநடுக்கோடு 45 அளவுக்கு மேற்காகச் சாய்ந்துள்ளது. அண்டார்க்டிக் கடல் ஆராய்ச்சியால் உருவாகியுள்ள கொள்கை யாது? 450 ஆண்டுகளுக்கு முன் (16ஆம் நூற்றாண்டில்) தென்முனை, வெப்பச் சகாராவின் கண்டநகர்வு விளைவினால் ஏற்பட்டது என்னும் ஒரு கொள்கை நிலவுகிறது. மேலும் நிலநடுக்கோட்டிற்குத் தெற்கேயுள்ள கண்டங்களில் மிகப்பெரிய கண்டமான டாண்ட் வானிலாந்தின் பகுதியாக ஒரு காலத்தில் இருந்தன என்னும் கொள்கைக்கு அண்மைக்காலக் கண்டுபிடிப்பு கள் அரவணைப்பாக உள்ளன. அண்டார்க்டிக் கடல், அதன் தரைகள், தரையின் காந்தப்புலம் ஆகியவற்றை ஆராய்ந்ததன் விளைவாக ஒரு புதுக்கொள்கை உருவாகியுள்ளது. கடல்தரை பரவுகிறது என்பதே அக்கொள்கை. அண்டார்க்டிக் சோலைகள் யாவை? அண்டார்க்டிக்கில் பசுமையான குட்டைகளும் ஏரி களும் கண்ணுக்குப் புலப்படும். இவையே அண்டார்க்டிக் சோலைகள். பனிக்கண்டம் என்பது எது? அண்டார்க்டிக் கண்டம். தென்கடல் என்பது யாது? அண்டார்க்டிக் பெருங்கடல். அண்டார்க்டிக் நாட்டுப்படச் சுவடியில் சிறப்புகள் யாவை? 1. உலக அறிவியலார் திரட்டிய செய்திகளிலிருந்து இப்படம் வரையப்பட்டுள்ளது.