உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


53. இறப்பு வீதம் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் தனியாட்கள் இறக்கும் அளவு. மேம்பட்ட மக்கள் நல்வாழ்வு வசதிக ளால், இந்த வீதம் தற்காலத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது.

54. உணர்வகற்றல் என்றால் என்ன?

வலி உணர்வை அறுவையின் பொழுது நீக்கல்.

55. உணர்வகற்றிகள் யாவை?

கொக்கேன், குளோரோபாம். வேறு பெயர் மயக்க மருந்துகள்.

56. உணர்வகற்றுநர் என்பவர் யார்?

மயக்க மருந்து மூலம் வலியுணர்வை நீக்கும் மருத்துவர்.

57. அழற்சி என்றால் என்ன?

காயம், நோய், தொற்றல், உறுத்தல் முதலியவற்றிற்குத் திசு உண்டாக்கும் பாதுகாப்புச் செயல். அறிகுறிகள்: வீக்கம், சிவத்தல், அரிப்பு, வலி. எ-டு. நுரையீரல் அழற்சி.

58. முறிவு என்றால் என்ன?

எலும்பு இரண்டாக முறிவதைக் குறிக்கும்.

59. இதன் அறிகுறிகள் யாவை?

வீக்கம், உருக்குலைவு, வேலை செய்வது நிற்றல், குறுகல் முதலியவை.

60. முறிவின் வகைகள் யாவை?

1. தனி முறிவு 2. கூட்டு முறிவு 3. பச்சை முறிவு.

61. படுத்திருக்கும் நிலைகள் யாவை?

1. குப்புறப் படுத்தல் 2. மல்லாந்து படுத்தல் 3. ஒருக்களித்துப் படுத்தல்.

62. நோயியம் என்றால் என்ன?

அறிகுறிகளின் தொகுப்பு. ஒரு நோயின் அறியக்கூடிய வடிவத்தைக் காட்டுவது. 100க்கும் மேற்பட்ட நோயியங்கள் உள்ளன. எ-டு. டவுன் நோயியம்.

63. பிறழ்ச்சி என்றால் என்ன?

இயல்பு நிலை நீங்கல். எ-டு. நிறப்பிறழ்ச்சி, உளப்பிறழ்ச்சி.