பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


4. நடத்தல். 5. கொழுப்பு உணவுப் பொருள்களைக் குறைத்தல்.

128. மாரடைப்பு நோய் (heart attack) என்றால் என்ன?

இதயத் தமனிகள் குறுக்களவு குறைந்து இறுதியாக குருதிக் குழாய் வழியில் குருதி உறையும். இதனால் ஏற்படும் அடைப்பே மாரடைப்பு, குருதி நாளத்தால் உணவையும் உயிர்வளியையும் பெறும் இதயத் திசுக்கள் நசிவுறும்.

129. இதய நிறுத்தம் (cardiac arrest) என்றால் என்ன ?

மிகக் கடுமையான மாரடைப்பைத் தொடர்ந்து இதயம் சட்டென்று முழுதும் செயலிழத்தல். இதனால் மூச்சு நின்று இறப்பு நிகழும்.

130. இதற்கு முதல் உதவி யாது?

1. இதயத்தைப் பிசைதல்
2. செயற்கை மூச்சு அளித்தல்

131. குருதிக்குழாய் அடைப்பு (embolism) என்றால் என்ன?

ஏதாவது ஒரு திண்பொருளால் குருதிக் குழாயில் ஏற்படும் தடை. உறைகட்டி, கொழுப்புத் துணுக்கு, கட்டியணு ஆகியவற்றில் ஏதாவது ஒன்று திண்பொருள் ஆகும். அல்லது காற்றுக் குமிழியும் தடை ஏற்படுத்தலாம்.

132. இதயத்தசை நோய்களின் மூன்று வகைகள் யாவை?

1. இதயத்தசை விரிவு நோய்
2. இதயத்தசைக் குறுக்க நோய்
3. இதயத்தசைப் பெருக்கநோய்

133. இதயத்தசை அழற்சி என்றால் என்ன?

இதயத்தின் நடுவுறை வீங்குதல்.

134. இதயத்தசைக் கட்டிகள் என்பவை யாவை?

இதயத்தசையில் கட்டிகள் தோன்றுவது அரிது. அப்படித் தோன்றினாலும் அவற்றில் 75% தீங்குதராக் கட்டிகள். 25% தீங்குதரும் புற்றுநோய்க் கட்டிகள்.

135. பிறவி இதய நோய்கள் யாவை?

1. இதய மேலறை இடச் சுவர்த்துளை.