பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜெரால்டு டெல்மன் 1972இல் நோபல் பரிசு பெற்றார்.

61. உயிரணு பற்றிப் புது உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

ஆல்பர்ட் கிளாடி 1974இல் நோபல் பரிசு பெற்றார்.

62. கண்ணறை அமைப்பு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜார்ஜ் பேலேடு 1974இல் நோபல் பரிசு பெற்றார்.

63. உயிரணுவின் மரபுப்பொருள், கட்டி நச்சுயிரி ஆகிய இரண்டிற்குமுள்ள தொடர்பை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ரெனட்டே டல்பெக்கோ 1975இல் நோபல் பரிசுபெற்றார்.

64. மூளையில் பெப்டைடு தூண்டி உண்டாவதைக் கண்ட றிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ரோஜர் கில்லிமின், ஷேலி ஆகிய இருவரும் 1977இல் நோபல் பரிசு பெற்றனர்.

65. பெப்டிக் தூண்டியின் கதிரியக்கத் தடுப்பாற்றலை மதிப்பீடு செய்ததற்காக நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்?

ரோசலின் யாலோ 1977இல் நோபல் பரிசுபெற்றார்.

66. வரம்பு நொதிகள் மற்றும் மூலக்கூறு மரபணுவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

வெர்னர் ஆர்பர் 1978இல் நோபல் பரிசு பெற்றார்.

67. மரபுவழிப் பொருள் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பருஜ் பெனாசரப் 1980இல் நோபல் பரிசுபெற்றார்.

68. உயிரணு மேற்பரப்பில் மரபணு வழியமைந்த அமைப்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜீன் டாசெட் 1980இல் நோபல் பரிசுபெற்றார்.

69. உட்கரு காடிகள் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?