உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23

கீழ்ப்புறம் (வெண்ட்ரல்) இல்லாதபோது, வாய்ப்புறம் வாய் எதிர்ப்புறம் எனக் குறிக்கப்படும்.

20. உடற்குழி என்றால் என்ன?

மிக முன்னேறிய விலங்குகளின்இடைப்படையில் உண்டாகும் பாய்மம் நிரம்பிய குழி. மண்புழு, நத்தை, முட்தோலி முதலியவற்றில் இது முதன்மையானது.

21. கண்ட அமைவு என்றால் என்ன?

கீழின விலங்குகளில் உடல் கண்டங்கள் அல்லது துண்டங்கள் அமைந்திருக்கும் முறை. எ-டு மண்புழு

22. வளைய உடலிகள் என்றால் என்ன?

வளைத்தசைப் புழுக்கள். உடல் வளையங்களானவை. திட்டமான உடற்குழி, உணவுக்குழி அமைந்திருக்கும். எ-டு. மண்புழு,

23. அட்டை அட்டைகள் என்பவை யாவை?

இருபால் பண்புள்ள வளைய உடலிகள். நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. தட்டையான உடல். உடலின் முன்னும் பின்னம் உறிஞ்சிகள் உண்டு. இவை இடம் பெயரவும் பிடிப்புக்கும் பயன்படுபவை.

24. இருபாலி என்றால் என்ன?

ஒரே உயிரியல் ஆண் பெண் இனப் பெருக்க உறுப்புகள் இருத்தல், மண்புழு.

25. மெல்லுடலிகள் என்பவை யாவை ?

மெல்லுடலிகள்டங்கள் இரா. தசைக்கால் மூடகம் உண்டு. புறக்கூடு ஒட்டாலானது. நிலம், நன்னீர், கடல் நீர் ஆகிய மூன்றிலும் வாழ்வது. எண்காலி, சிப்பி, நத்தை.

26. முதுகு எலும்பு இல்லாத விலங்குகளில் மிகப் பெரிய பிரிவு எது?

கணுக்காலிகள், கரப்பான்.

27. அரசநண்டு என்பது யாது?

உண்மை நண்டன்று. தொடக்க காலக்கணுக்காலி. புழுக்களையும் நத்தைகளையும் உணவாகக் கொள்வது.

28. இரு கிளை உறுப்பு என்றால் என்ன?

நண்டு முதலிய ஒட்டுடலிகளில் காணப்படும் உறுப்பு.