பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247. கன்னிப் பெருக்கம் என்றால் என்ன?

பூச்சிகளில் காணப்படும் ஒரு கன்னி இனப்பெருக்க முறை. கலவி இல்லாமல் பெண்கள் பெண்களையே இதில் உண்டாக்கும்.

248. கீழின விலங்குகள் மேற்கொள்ளும் கலவியிலா இனப்பெருக்க முறைகள் யாவை?

பிளவுபடல், கன்னி இனப்பெருக்கம்.

249. விந்தணு என்றால் என்ன?

பால் இனப்பெருக்கத்தில் பங்கு கொள்ளும் ஆண் அணு. தலை, உடல், வால் உண்டு.

250. கருமுட்டை என்றால் என்ன?

விந்தணுவை ஏற்கும் பெண் அணு.

251. முனைப்புரி (அக்ரோசோம்) என்றால் என்ன?

விந்தணுவின் தலைப்பகுதி, முட்டையைத்துளைத்துச் செல்லப்பயன்படுகிறது.

252. கருப்பை என்றால் என்ன?

பெண்ணிடத்துக் கருக்குழலின் விரிந்த பகுதி. இதில் முட்டைகள் வளரும்.

253. சூல்பை என்றால் என்ன?

சூல் அல்லது முட்டை வரும் இடம்.

254. கரு என்றால் என்ன?

கருவணுவிலிருந்து உண்டாகும் பாலினப் பொருள். புதிய கால் வழியை உண்டாக்குவது.

255. கருவியல் என்றால் என்ன?

கருத்தோற்றம், அதன்வளர்ச்சி ஆகியவற்றை ஆராயும் துறை.

256. பிளவுபடல் என்றால் என்ன?

இனப்பெருக்கத்தினால் ஓர் உயிரி சமபகுதியாக இரண்டாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் தனித்தனி இளம் உயிரிகளாதல். எ-டு அமீபா.

257. பிளலிப்பெருகல் என்றால் என்ன?

கருவுற்ற முட்டை இழைப்புரிவுகளாய்ப் பிரிவுறுதல். இதில் சமஎண்ணிக்கை உட்கருவினுள் சிறிய கண்ணறை-