பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


அடுத்த உயிரை அண்டி வாழும் உயிர். இது வாழ ஓம்புயிர் தேவை. இது அக ஒட்டுண்ணி, புற ஒட்டுண்ணி என இருவகை. இது தான் வாழும் உயிருக்குத் தீமை விளைவித்துத் தான் நன்மை பெறுவது. எ-டு நாக்குப்பூச்சி, ஈரல் புழு.

98. புறவாழ்வி என்றால் என்ன?

ஏனைய உயிர்களின் மேல் வாழும் விலங்கு.

99. அக ஒட்டுண்ணி என்றால் என்ன?

உடலின் உள்ளே வாழும் ஒட்டுயிரி. எ-டு நாடாப்புழு.

100. கட்டாய ஒட்டுண்ணி என்றால் என்ன?

வேறு வழியில்லாது கட்டாயம் பிற உயிரைச் சார்ந்துள்ள உயிரி. எ-டு ஈரல் புழு, நாடாப்புழு.

101. ஓம்புயிர் என்றால் என்ன?

ஒட்டுண்ணி வாழ இடமளிக்கும் உயிரி. இது இருவகை.
1. திட்ட ஒம்பி - புகையிலை
2. இடைநிலை ஒம்பி - அனோபிலஸ் கொசு

102. ஊனுண்ணி என்றால் என்ன?

உயிரின் சதையை உண்ணும் விலங்கு. எ-டு சிங்கம், புலி

103. தாவர உண்ணி என்றால் என்ன?

புற்கள் மற்றும் தாவரங்களை மட்டும் உண்ணும் விலங்கு. எ-டு யானை, முயல்.

104. அனைத்துண்ணி என்றால் என்ன?

அனைத்துப் பொருள்களையும் உண்ணும் விலங்கு. காகம் தாவரப்பொருள், விலங்குப் பொருள் ஆகிய இரண்டையும் உண்பது.

105. தன்னின உண்ணி என்றால் என்ன?

தன்னின உயிர்களைத் தானே உண்ணும் உயிரி. அரச நாகம் சிறிய பாம்புகளை இரையாக உண்ணும்.


10. மக்கள் நல்வாழ்வு

1. பொது நல்வாழ்வும் வாழ்நலமும் என்றால் என்ன?