உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110


குளிர்ச்சியினால் வளி நீர்மமாதல். எ-டு. நீர்மமாகிய பெட்ரோலிய வளி.

159. எல்என்ஜி என்றால் என்ன?

நீர்மமாகிய இயற்கை வளி.

160. எல்பிஜி என்றால் என்ன?

நீர்மமாகிய பெட்ரோலிய வளி. இண்டேன் வளி இவ்வகை சார்ந்ததே.

161. புகையாவி (ஒலியம்) என்றால் என்ன?

புகையும் நிறமற்ற நீர்மம். கந்தக இரு ஆக்சைடை அடர்கந்தகக் காடியில் கரைத்துப் பெறலாம்.

162. சேர்க்கை வளி என்றால் என்ன?

தொகுப்பு வளி. அய்டிரஜனும் கரி ஓராக்சைடும் சேர்ந்த கலவை.

163. மெய்வளி என்றால் என்ன?

திட்டமான அளவு மூலக்கூறுகளைக் கொண்ட வளி.

164. எச்ச நீக்கி என்றால் என்ன?

வளிகளிலிருந்து எஞ்சிய பொருளை நீக்கும் வேதிப்பொருள்.

165. தீக்கல் என்றால் என்ன?

மாசுள்ள இயற்கைச் சிலிகான். விளக்கேற்றிகளில் பயன்படும் தீக்கற்கள். செரியமும் இரும்பும் சேர்ந்த உலோகக் கலவைகளிலிருந்து செய்யப்படுவது.

166. சிலிகேட் கனிமங்கள் யாவை?

பாறை தோற்றுவிக்கும் கனிமத் தொகுதி. புவி வெளிப்புற ஒட்டில் அதிகமுள்ளது. எல்லாக் கனிமங்களிலும் மூன்றில் ஒரு பங்குள்ளது. ஆறுதொகுதிகள். எ-டு. காக்கைப்பொன், களிமண் கனிமங்கள்.

167. சிலிகன் என்பதென்ன?

அதிகம் கிடைக்கும் அலோகம். இரு வேற்றுருக்களில் உள்ளது. உருவமற்றது, படிகமுள்ளது.

168. இதன் பயன்கள் யாவை?

அரிமான எஃகு, கண்ணாடி, காந்தங்கள், ஆக்சிஜன் நீக்கி ஆகியவை செய்யப் பயன்படுவது.