43
ஆக்சைடு. மூவாக்சைடு - கந்தக முவாக்சைடு.
32. இரு சல்பைடு என்றால் என்ன?
ஒரு மூலக்கூறு கந்தகத்தில் ஈரணுக்கள் உள்ள சல்பைடு. எ-டு. கரி இரு சல்பைடு. இச்சல்பைடில் கந்தகம் கரையும்.
33. கந்தக அமிலம் எந்த உப்பைக் கொடுக்கும்?
சல்பேட்
34. நைட்டிரிக் காடி எந்த உப்பைக் கொடுக்கும்?
நைட்ரேட்
35. அயடிரோ குளோரிகக் காடி எந்த உப்பைக் கொடுக்கும்? குளோரைடு.
36. பாசுவரிக அமிலம் எந்த உப்பைக் கொடுக்கும்?
பாஸ்பேட்
37. பெராக்சைடு என்றால் என்ன?
ஒரு கனிமக் கூட்டுப் பொருள்.
38. பிணைப்பு என்றால் என்ன?
அணுக்களையும் அணுத்தொகுதிகளையும் இறுக்கிப் பிடிக்கும் விசை.
39. வேதிநாட்டம் என்றால் என்ன?
ஓரணு மற்றொரு அணுவோடு சேரும் போக்கு. வேதிச் செயலுக்கு இன்றியமையாதது.
40. வேதிப் பிணைப்பு என்றால் என்ன?
ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களை நெருக்கி வைக்கும் விசை,
41. எத்தனை பிணைப்புகள் வரை உருவாக்கலாம்?
ஐந்து பிணைப்புகள் வரை உருவாக்கலாம். எ-டு. ஒற்றைப் பிணைப்பு. H + Cl → H-CI.
42. ஒற்றைப்பிணைப்பு என்றால் என்ன?
இரு தனிமங்களுக்கிடையே உள்ள உடன் பிணைப்பு. இதில் இரு மின்னணுக்கள் சேர்கின்றன.
43. இரட்டைப்பிணைப்பு என்றால் என்ன?
ஒரு கூட்டுப் பொருளில் ஈரணுக்களை இணைக்கும் இரு உடன் இணைப்புகள். இதில் ஒரு பிணைப்பு சிக்மா பிணைப்பு, மற்றொன்று பை பிணைப்பு.