பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50உண்டாக்கினாலும், அதில் ஒரே வகையான தனிமங்கள் ஒரு திட்டமான எடைவீதத்திலேயே கூடியிருக்கும் 1799இல் பிரெளஸ்ட் இவ்விதியைக் கண்டறிந்தார்.

3. மடங்குவீத விதி

இரு தனிமங்கள் இணைந்து, ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களைக் கொடுக்கும்போது குறிப்பிட்ட எடையுள்ள ஒரு தனிமத்துடன் சேரும் மற்றொரு தனிமத்துடன் எடைகள் சிறிய முழு எண் வீதத்தில் இருக்கும். 1803இல் இதை ஜான் டால்டன் வரையறை செய்தார்.

89. பாபோ விதி யாது?

ஒரு கரைபொருளை நீர்மத்தில் கரைக்க, அதன் ஆவியழுத்தம் தாழ்வுறும். அவ்வாறு தாழ்வது அதில் கரைந்துள்ள கரைபொருள் அளவுக்கு நேர்வீதத்தில் இருக்கும்.

90. இவ்விதி எப்பொழுது வகுக்கப்பட்டது?

ஜெர்மன் வேதிஇயலார் பாபோ என்பவரால் 1847இல் வகுக்கப்பட்டது.

91. ரெளலட்டு விதி யாது?

ஒரு கரைசலின் சார்பு ஆவியழுத்தக் குறைவு, அதில் கரைந்துள்ள கரைபொருளின் மோல் பின்னத்திற்குச் சமம்.

92. தனிமவரிசை விதியைக் கூறு.

தனிமங்களின் இயற்பண்புகளும் வேதிப்பண்புகளும் அவற்றின் அணு எடைகளுக்கேற்ப மாற்றமடைகின்றன.

93. இவ்விதியை வகுத்து வெளியிட்டவர் யார்?

மெண்டலீஃப் என்பார் 1869இல் வெளியிட்டார்.

94. இவர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டுள்ளார்?

மெண்டலிவியம் என்னும் கதிரியக்கத் தனிமம் இவர் பெயரால் அமைந்தது. இது புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக் கூடிய பல ஒரிமங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.

95. உட்வோர்டு - ஆஃப்மன் விதிகள் யாவை?