பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64



பண்பை இழக்கும்.

6. குறிக்கோள் படிகம் என்றால் என்ன?

இது ஒரு பின்னல் கோவை. ஒழுங்காகவும் அயலணுவாகவோ அயனியாகவோ இல்லாமலிருக்கும் படிகம்.

7. குறிக்கோள் கரைசல் என்றால் என்ன?

கலக்கும்பொழுது உள்ளாற்றல் மாற்றமில்லாமலும் அதன்பகுதிகளுக்கிடையே கவர்ச்சி விசை இல்லாமலும் இருக்கும் கரைசல்.

8. தாய்நீர்மம் என்றால் என்ன?

படிகங்கள் தோன்றிய பின் எஞ்சியுள்ள கரைசல்.

10. உலோகம்

1. தனிம வரிசை அட்டவணை என்றால் என்ன?

தனிம வரிசை விதிப்படி அமைந்த அட்டவணை. பழைய பெயர் ஆவர்த்தன அட்டவணை.

2. இவ்வட்டவணையின் சிறப்பு யாது?

இதில் 9 தொகுதிகள் உள்ளன. இது தனிமப் பண்புகளை நன்கு விளக்குவது. கனிம வேதியியல் ஆராய்ச்சிக்கும் பெரிதும் பயன்படுவது. இதன் நீள்வடிவத் தனிம வரிசை அட்டவணை, வேதியியலில் ஒரு விவிலிய நூல் ஆகும்.

3. தாதுக்கூளம் என்றால் என்ன?

மண், பாறை முதலிய பயனற்ற பொருள்கள் அடங்கிய தாதுக்கள்.

4. தாது என்றால் என்ன?

ஒரு வேதித் தனிமத்தின் கனிமமூலம். எ-டு பாக்சைட் அலுமினியத் தாது.

5. மீ அணுவெண் தனிமங்கள் யாவை?

கதிரியக்க வரிசைத் தனிமங்கள். யுரேனியத்தைக் காட்டிலும் உயர்ந்த அணுவெண்களைக் கொண்டவை. எ-டு. நெப்டுனியம், புளுட்டோனியம்.