உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் விருந்து.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம்

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்று மேதொழ தம்வினை ஒயுமே.

---நம்மாழ்வார்


தமிழில் அறிவியற் கருத்துகளைத் தெளிவாகக் கூறும் நல்ல உரைநடை நூல்கள் இன்னும் குதிரைக் கொம்பாகவே இருந்து வருகின்றன.

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை,

என்று அந்தப் பேதை உரைத்ததைப் பாரதியார் சுமார் ஐம்பதாண்டுகட்கு முன்னர் எடுத்துக் காட்டியும் இத்துறையில் மேனாட்டு அறிஞர்கள் பெட்ரண்டு ரஸல், எச். ஜி. வெல்ஸ் போன்றார் எழுதியுள்ளவை போன்ற உரைநடை நூல்கள் இன்னும் தோன்றவில்லை. அறிவியல் பயின்ற தமிழறிஞர்கள் இத்துறையை வளம் படுத்துவார்களாக.

இராமன் அமைத்த சேதுவில் அணில் பெற்ற பங்கைப்போல் யான் அவ்வப்பொழுது பல இதழ்கட்கும் மலர்கட்கும் எழுதி வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்து 1. திருவாய்மொழி:3. 3.8 2. பாரதியார் கவிதைகள்-தமிழ்த்தாய்1ை0,