பக்கம்:அறிவியல் விருந்து.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணம் #23 இந்த எரிபொருளின் எடை இராக்கெட்டின் மொத்த எடையில் 92 சதவிகிதமாகும். இராக்கெட்டில் இந்த எரிபொருள்கள் நிரப்பப்பெற்றிருக்கும் தொட்டிகள் இதுகாறும், மனிதனால் உருங்ாக்கப்பெறாத சிறப்பியல்பு கள் வாய்ந்தவை. இவை யாவும் காற்று புகாத அறைகள்; அணுவளவும் ஒழுகாதவை. இச்சிறப்பியல் டை விளக்க ஓர் எடுத்துக் காட்டு: இத்தொட்டி ஒன்றில் பணிக்கட்டி நிரப்பி அத்தொட்டியை 79°F வெப்ப நிலையுள்ள ஒர் அறையில் வைத்தால் அப்பணிக்கட்டி உருக எட்டரை ஆண்டுகள் ஆகும். இதன் மூன்றாவது பகுதியின் உச்சியில்தான் கட்டளைப்பகுதி, மணிப் பகுதி, அம்புலி ஊர்தி என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட அப்போலோ-11 விண்கலம் பொருத்தப் பெற்றிருந்தது. இந்த மூன்று பகுதிகளும் சேர்ந்த அமைப்பின் உயரம் 17.55 மீட்டராகும். இதனைத் தாங்கியுள்ள மாபெரும் இராக்கெட்டினைச் செலுத்து வதற்கென்று தனிப்பட்ட இராக்கெட்டு தளம் (Launching. pad) கென்னடி முனையில் உள்ளது. அங்கு நிறுவப் பெற்றுள்ள அம்புலி நிலையம் (Moon port) 1575 மீட்டர் உயரமுள்ள கட்டடமாகும். அப்போலோ-11 விண்வெளிக் கலமும் இராக்கெட்டும் கென்னடி முனையின் தளத்தில் தின்ற பொழுது அதன் உயரம் 35 மாடிக் கட்டடத்தின் உயரத்திற்குச் சமமாக இருந்தது! இரண்டாயிரம் பெரிய கார்களின் எடை! 343 ஜெட் போர் விமானங்கள் பறக்கும் பொழுது, உருவாகக் கூடிய் ஆற்றலை இந்த இராக்கெட்டு பெற்றி ருந்தது. இந்த ஆற்றலைக் கொண்டு ஒரு மோட்டார்க் காரை மணிக்கு 96 கி.மீ. வேகத்தில் 34 ஆண்டுகள் ஒட்ட முடியும்! அப்போலோ..!! விண்வெளிக் கலனை உ. ச் சி யி ல் தாங்கிக் கொண்டு விண்ணில் கிளம்பிய 381.7 டன் எடை